இந்திய கிரிக்கெட்

அகர்கர் செய்த வேலையால்.. கில் திரும்ப டி20 அணிக்கு வரப்போறார்.. ஐபிஎல்-ல் இது நடக்கும் – புஜாரா உறுதி

இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய டி20 அணிக்கு திரும்ப வருவார் என புஜாரா உறுதியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது சுப்மன் கில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய டி20 அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் ஐபிஎல் தொடரில் சாதிப்பதற்காக எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

அவரை ஊக்கப்படுத்தும்

இதுகுறித்து புஜாரா பேசும் பொழுது “இந்திய டி20 அணியில் கில்லை சேர்க்காமல் விட்டதால் அந்த விஷயம் அவரை ஊக்கப்படுத்துவதாக இருக்கும். உண்மையில் அவர் மூன்று வடிவ கிரிக்கெட் விளையாடவும் தரமான வீரராக இருக்கிறார்”

“இந்த ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக விளையாடினால் நிச்சயம் இந்திய டி20 அணிக்கு திரும்பி வந்துவிட முடியும். அவர் ஐபிஎல் தொடரில் மட்டும் சிறப்பாக விளையாடிவிட்டால், மூன்று வடிவத்திலும் சிறப்பாக விளையாடுகின்ற காரணத்தினால், நிச்சயம் இந்திய டி20 அணியின் திட்டங்களில் அவரது பெயர் இருக்கும்”

- Advertisement -

இதுதான் வாய்ப்பு

“தற்போது அவர் இந்திய டி20 அணியில் இல்லாததால் அவர் மேல் கொஞ்சம் அழுத்தம் இருக்கும். ஆனால் இதுவரை அவர் என்ன ஸ்டைலில் பேட்டிங் செய்து வந்தாரோ அதே ஸ்டைலில் விளையாடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது”

இதையும் படிங்க : விராட் கோலி வலிக்காமல் செய்துவிடுவார்.. நீங்கள் காயப்பட்டதை ஸ்கோர் போர்டு பார்த்தே தெரிந்து கொள்ள வேண்டும் – ரபாடா பேச்சு

“அவர் இன்னும் கொஞ்சம் வேகமாக ரன்கள் எடுக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் அதுதான் தற்போது அவர் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விஷயம். இந்த ஐபிஎல் சீசன் அவருக்கு மிகவும் சரியான ஒரு சந்தர்ப்பம். அவர் 150 முதல் 160 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினால் மீண்டும் இந்திய டி20 அணிக்கு வந்துவிட முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by