தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரில் சௌராஷ்ட்ரா அணிக்காக விளையாடும் நட்சத்திர இந்திய வீரர் புஜாரா உள்நாட்டு முதல் தரப் போட்டிகளில் பிரையன் லாராவின் சாதனையை முறியடித்திருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியில் கடந்த ஆண்டில் புஜாரா நீக்கப்பட்டார். இருந்தபோதிலும் அவர் தொடர்ந்து இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டிலும், உள்நாட்டு முதல் தரப் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடி வருகிறார். மேலும் இதில் சதங்களாக குவித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சௌராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சத்தீஸ்கர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 578 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. அந்த அணிக்கு அமன்தீப் காரே 394 பந்தில் ஆட்டம் இழக்காமல் 203 ரன்கள் குவித்தார். சஞ்சீவ் தேசாய் 241 பந்துகளில் 146 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து இந்த இமாலய இலக்கை தாண்டினால் மட்டுமே கூடுதல் புள்ளிகள் பெற முடியும் என்ற கட்டாயத்தில் விளையாடிய சௌராஷ்டிரா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஹர்விக் தேசாய் 5, சிராக் ஜனி 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். அடுத்து வந்த செல்டன் ஜாக்சன் 62 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில் ஒருமுனையில் மிகச் சிறப்பாக விளையாடிய புஜாரா அணிக்கு கட்டாய தேவை இருந்த நேரத்தில் சதம் அடித்து அசத்தினார். 246 பந்துகளை சந்தித்த அவர் தற்பொழுது 138 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறார். சௌராஷ்டிரா அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் தாண்டி இருக்கிறது. புஜாராவுக்கு ஒட்டுமொத்தமாக அவருக்கு முதல் தர போட்டிகளில் இது 66 ஆவது சதம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டு ரஞ்சித் டிராபி தொடரில் தன்னுடைய ஐம்பதாவது முதல் தர சதத்தை அடித்து இருந்தார்.
இதையும் படிங்க : 147 வருட வரலாறு.. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரபாடா யாரும் செய்யாத சாதனை.. நெருங்க முடியாத ரெக்கார்டு.. பங்களாதேஷ் முதல் டெஸ்ட்
இதன் மூலம் முதல் தர போட்டியில் அதிக சதம் அடித்திருந்தவர்கள் பட்டியலில் பிரையன் லாராவை தற்போது புஜாரா முந்தி இருக்கிறார். அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே சாதித்திருக்கும் புஜாரா அணியில் இருக்க வேண்டும் என்கின்ற குரல்கள் எழுந்திருக்கின்றன. இந்த நிலையில் அவருடைய இந்த சதம் அவருடைய ஆதரவு குரல்களுக்கு வலு சேர்த்து இருக்கிறது!