147 வருட வரலாறு.. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரபாடா யாரும் செய்யாத சாதனை.. நெருங்க முடியாத ரெக்கார்டு.. பங்களாதேஷ் முதல் டெஸ்ட்

0
1087
Rabada

தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா 300 வது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றியது உடன் புதிய உலகச் சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறார்.

தென் ஆப்பிரிக்க அணி பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது.

- Advertisement -

தாமாக சென்று சிக்கிய பங்களாதேஷ் அணி

இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. இந்த முடிவை அடுத்த அரை மணி நேரத்தில் தவறானது என பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி நிரூபித்து காட்டியது.

தற்போது இந்த டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக 26.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்திருக்கிறது. இதில் வியான் முல்டர் 3, ககிசோ ரபாடா 2, கேசவ் மகாராஜ் ஒரு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்பி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவோம் என்று பங்களாதேஷ் கேப்டன் ஏற்கனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரபாடா படைத்த உலகச் சாதனை

இந்த போட்டியில் இரண்டு விக்கெட் கைப்பற்றியதின் மூலமாக ரபாடா 66 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 116 இன்னிங்ஸ்களில் 301 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இவருடைய பந்துவீச்சு ஆவரேஜ் 22.8, ஒரு ஓவருக்கு கொடுக்கப்படும் ரன் விகிதம் 3.36 என்று இருக்கிறது. ஒரு இன்னிங்ஸில் 14 முறை 4 விக்கெட்டும் 14 முறை 5 விக்கெட்டும் கைப்பற்றி இருக்கிறார்.

மேலும் மிகக் குறிப்பாக இவருடைய பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் 39.41 என இருக்கிறது. இந்த பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் என்பது எத்தனை பந்துக்கு ஒரு முறை விக்கெட் கைப்பற்றுகிறார்கள் என்கின்ற சராசரி அளவு. இந்த வகையில் ரபாடா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 39 பந்துகளுக்கு ஒருமுறை விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். இதன் மூலம் குறைந்த ஸ்ட்ரைக் ரைட்டில் 300க்கும் மேற்பட்ட விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில், 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இடத்தைப் பிடித்து சாதித்திருக்கிறார்.

இதையும் படிங்க : தோனிக்கு எதிரா நாங்க இப்படித்தான் பிளான் பண்ணுவோம்.. விராட் ரோகித் இதுல பெஸ்ட் – சஞ்சு சாம்சன் பேட்டி

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் 300-க்கும் மேற்பட்ட விக்கெட் வீழ்த்தியவர்கள் :

ககிசோ ரபாடா (300 விக்கெட்) – 39.41
டேல் ஸ்டெய்ன் (439) – 42.38
வக்கார் யூனிஸ் (373) – 43.49
மால்கம் மார்ஷல் (376) – 46.76
பேட்ரிக் கம்மின்ஸ் (269) – 46.89

- Advertisement -