புஜாரா 73 பந்தில் அதிரடி சதம்; ஒரே ஓவரில் 22 ரன்கள் – வீடியோ இணைப்பு!

0
191
Pujara

இந்திய டெஸ்ட் அணியில் ராகுல் டிராவிட்டுக்கு பிறகு அவரது இடத்தில் மிகச்சிறப்பாக விளையாடி வருபவர் செதேஷ்வர் புஜாரா. இவர் இந்திய கிரிக்கெட்டிற்கு டெஸ்ட் போட்டி வடிவத்தில் மட்டுமே விளையாடி வருகிறார். மற்ற இரண்டு வடிவங்களில் இவர் இந்திய கிரிக்கெட் அணியில் இல்லை.

தற்போது புஜாரா இங்கிலாந்தின் உள்நாட்டு டெஸ்ட் தொடரான கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் சசக்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்தத் தொடரின் நடுவில் அந்த அணியின் கேப்டனாக உயர்ந்தார். கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சதங்கள் இரட்டை சதங்கள் என பிரமாதமாக விளையாடினார். இதையடுத்து இங்கிலாந்து சென்று இந்திய அணி விளையாடிய ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடினார். இதையடுத்து வெள்ளை பந்து போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க ஆரம்பிக்க, இவர் மீண்டும் கவுண்டி போட்டிகளுக்கு திரும்பினார்.

- Advertisement -

இங்கிலாந்து கவுண்டி போட்டிகள் முடிவடைந்து தற்போது இங்கிலாந்தின் உள்நாட்டு ஒருநாள் போட்டி தொடரான ராயல் லண்டன் கோப்பை தொடர் நடந்து வருகிறது. இந்தத் தொடரிலும் சசக்ஸ் அணியின் கேப்டனாக இருந்து செதேஷ்வர் புஜாரா வழி நடத்தி வருகிறார். டெஸ்ட் போட்டிக்கான சிறப்பு பேட்ஸ்மேனான புஜாரா வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக தற்போது இங்கிலாந்தில் ஆடி வருகிறார்.

நேற்று ராயல் லண்டன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சசக்ஸ் அணி வார்விக்செயர் அணியோடு மோதியது. இதில் முதலில் விளையாடிய வார்விக்செயர் அணி ராப் யேட்ஸின் சதத்தின் உதவியோடு 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய சசக்ஸ் அணி 112 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழக்க அணியின் கேப்டன் புஜாரா நான்காம் இடத்தில் களம் இறங்கினார். மிகச் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வெற்றியை நோக்கி அணியை முன்னேற்றி நகர்த்திச் சென்றார். நாற்பத்தி மூன்றாவது ஓவரின் போது 59 பந்தில் 66 ரன்களை புஜாரா எடுத்திருந்தார். அப்போது அவரது அணியின் வெற்றிக்கு 6 ஓவர்களில் 70 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் புஜாரா 44 ஆவது ஓவரில் 4, 2, 4 ,2, 6, 4 அதிரடியாக 22 ரன்களை குவித்தார். இதையடுத்து 30 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் நாற்பத்தி ஒன்பதாவது ஓவரின் போது மிகச் சிறப்பாக விளையாடிய புஜாரா 79 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சர் என 107 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்ததும், சசக்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. புஜாரா ஒரு ஓவரில் 22 ரன்கள் குவித்த வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!