தற்போது விராட் கோலி ஓய்வு பெற்றிருப்பதால் இந்திய டெஸ்ட் பேட்டிங் யூனிட்டில் நான்காவது இடத்திற்கு எந்த இளம் வீரர் சரியாக பொருந்துவார்? என்பது குறித்து இந்திய வீரர் புஜாரா பேசியிருக்கிறார்.
நேற்று விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான நான்காவது இடத்திற்கு எப்படி வீரரை கண்டறிவது? என்பது குறித்து பூஜா ரா கூறியிருக்கிறார்.
4வது இடம் முக்கியமானது ஏன்?
பொதுவாக பேட்டிங் யூனிட்டில் நான்காவது இடம் என்பது டாப் ஆர்டரையும் லோயர் மிடில் ஆர்டரின் இணைக்கும் முக்கிய இடமாக இருக்கிறது. மேலும் நான்காவது இடத்தில் விளையாடும் பொழுது பந்து தேய்ந்து விளையாடுவதற்கு வசதியாக இருக்கும். இந்த நேரத்தை பயன்படுத்தி தைரியமாக ஷாட் விளையாடி ரன்கள் கொண்டுவர வேண்டிய பேட்ஸ்மேன் தேவை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இடத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேன் தீராத ரன்கள் எடுக்கக்கூடியவராகவும் இருக்க வேண்டும், அதே சமயத்தில் அவர் தைரியமாக விளையாட கூடியவராகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த இடத்தில் இருந்து தான் ஒரு அணிக்கு ரன்கள் நிறைய வரும். எனவேதான் இந்த இடத்திற்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி என சிறந்த பேட்ஸ்மேன்கள் விளையாடினார்கள்.
4வது இடத்திற்கு யார்?
இது குறித்து புஜாரா பேசும் பொழுது “இந்த இடத்தில் பேட்டிங் செய்வதற்கு யார் சரியாக இருப்பார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கு நமக்கு குறைந்தது இரண்டு தொடர்களாவது தேவைப்படும். ஏனென்றால் இது மிகவும் முக்கியமான இடம். மேலும் உங்களுடைய சிறந்த பேட்டர் இந்த இடத்தில் விளையாட வேண்டியது அவசியம். எனவே சிறந்த டாக்டர் யார் என்பதை தீர்மானிக்க வேண்டிய இடத்தில் இந்திய அணி நிர்வாகம் இருக்கிறது”
இதையும் படிங்க: கேப்டன் பதவி கிடையாது.. விராட் கோலி ஓய்வு பெற.. இந்த ஒரு விதியே முக்கிய காரணம் – வெளியான தகவல்கள்
“மேலும் விளையாடும் அணியில் இடம் பிடிப்பதற்கு தற்போது பலவீரர்கள் இருக்கிறார்கள். தற்போது யாருக்கும் இடங்கள் உறுதியானதாக இல்லை. இது ஒரு செயல்முறை. எனவே இந்த இடத்திற்கு யார் சரியான வீரர் என்பதை கண்டறிவதற்கு நிச்சயம் நேரம் எடுக்கும்” என்று கூறியிருக்கிறார்.