இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி நேற்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது அவருடைய ஓய்வுக்கு பின்னணியில் என்ன காரணம் இருக்கலாம்? என்ற செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா திடீரென சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதற்கு அடுத்து யாரும் எதிர்பார்க்காத விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
முதலில் வந்த காரணம்
இந்திய டெஸ்ட் அணிக்கு விராட் கோலி அடுத்த இரண்டு ஆண்டுகள் கேப்டனாக இருக்க விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் இந்திய டெஸ்ட் அணிக்கு தற்காலிக கேப்டன் தேவையில்லை எனவும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிரந்தர கேப்டன் தேவை என கம்பீர் விராட் கோலியின் வேண்டுகோளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுவே காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
இதைவிட மிக முக்கிய காரணமாக இந்திய அணி ஒன்றரை மாதங்கள் தாண்டி செய்யும் நீண்ட சுற்றுப் பயணங்களில் குடும்பத்தினர் 15 நாட்கள் மட்டுமே வீரர்களுடன் தங்க முடியும் என்பதுதான் பெரிய சிக்கலை உருவாக்கி இருக்கிறது. ஏற்கனவே விராட் கோலி தன்னால் தனி அறையில் தனியாக சோகமாக இருக்க முடியாது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பமே முக்கியம்
இந்த நிலையில் விராட் கோலி குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புவதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிக அதிகாரம் கொண்ட நபர்களுக்கு கடிதம் மூலமாக தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்த விதிகளை மாற்றிக் கொள்வதற்கு தயாராக இல்லை. எனவே விராட் கோலி உடனடியாக ஓய்வு அறிக்கையை வெளியிட தயாராக இருந்திருக்கிறார்.
இதையும் படிங்க : 2025 WTC பைனல்.. ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு.. ஸ்டார் ஆல்ரவுண்டர் வருகை.. தென் ஆப்பிரிக்கா தப்பிக்குமா?
இந்த நேரத்தில் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால், விராட் கோலியின் ஓய்வு அறிக்கையை உடனே வெளியிட வேண்டாம் என்று தடுக்கப்பட்டிருக்கிறது. பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நிலைமை சரியானதும் விராட் கோலி தன்னுடைய ஓய்வு அறிக்கையை வெளியிட்டு விட்டார். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்க விராட் கோலிக்கு விலக்கு கொடுக்கப்பட்டிருந்தால் அவர் ஓய்வு பெற்றிருக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.