பும்ரா கேப்டனா இருக்க தகுதியான ஆளு.. அதுக்கு முக்கியமா இந்த வேலையை செய்யறாரு – புஜாரா கருத்து

0
29
Pujara

இந்திய அணிக்கு கேப்டன் ஆவதற்கு பும்ராவுக்கு தகுதி இருக்கிறது எனவும் அதற்கான காரணம் என்னவென்பது குறித்தும் இந்திய அணியின் வீரர் புஜாரா பேசி இருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இருந்து வழிநடத்தி ஆட்டநாயகனாகவும் இருந்து போட்டியை பும்ரா வென்று இருக்கிறார். இந்த நிலையில் இரண்டாவது போட்டிக்கு ரோகித் சர்மா திரும்பி கேப்டன் பொறுப்பை மீண்டும் வகிக்க இருக்கிறார். இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு அடுத்து பூம்பூரா இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர கேப்டனாக வரவேண்டும் என பேச்சுக்கள் அதிகரித்து இருக்கிறது.

- Advertisement -

ஒரு போட்டியில் மாறிய விஷயங்கள்

பும்ரா கேப்டனாக களத்தில் எப்படி நடந்து கொண்டார்? என்பது குறித்து தொலைக்காட்சியில் பெரிய அளவில் யாரும் பார்த்திருக்க முடியாது. அவர் சக பந்துவீச்சாளர்களுக்கு சின்ன சின்ன விஷயங்களை கூறிவிட்டு நகர்ந்து கொண்டார். அந்த விஷயங்களை அவர்கள் தொடர்ந்து செயல்படுத்துவதை மட்டும் உறுதி செய்து கொண்டார்.

அதே சமயத்தில் வீரர்களுக்கு அறிவுரைகள் தேவையில்லாத பொழுது அதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் கூறி இருந்தார். இந்த வகையில் வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுப்பதும், தேவையான நேரத்தில் அவர்களுக்கு சரியான ஆலோசனைகளை வழங்குவதும் என துல்லியமாக செயல்பட்டு இருந்தார்.

- Advertisement -

பும்ராவுக்கு தகுதி இருக்கிறது

இதுகுறித்து புஜாரா கூறும்பொழுது “எந்த சந்தேகமும் கிடையாது பும்ராவுக்கு கேப்டன் ஆகும் தகுதி இருக்கிறது. சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்து ஆஸ்திரேலியா வந்து முதல் டெஸ்ட் போட்டியில் அவர் செயல்பட்ட விதம் அதை நிரூபிக்கிறது. மேலும் அவர் அணியை வழிநடத்தக் கூடிய ஒரு கதாநாயகனாக இருப்பார்”

இதையும் படிங்க : 339 ரன்.. இந்திய கேப்டன் அதிரடி சதம்.. ஜப்பான் அணியை வீழ்த்தியது.. செமி பைனல் வாய்ப்பு எப்படி?.. U19 ஆசியக் கோப்பை 2024

“மேலும் வீரர்களுக்கு அறிவுரை தேவை இல்லாத பொழுது அதை தான் ஏற்றுக்கொண்டு விலகி விடுவதாகவும் கூறியிருக்கிறார். அனுபவம் இருந்தால் அமைதியாக இருப்பார்கள். அதுதான் ஒரு நல்ல கேப்டனின் அடையாளம். இந்த வகையில் பும்ரா மிகவும் நட்பானவர். ட்ரெஸ்ஸிங் ரூமில் சக வீரர்களுக்கு உதவி செய்வார். கிரிக்கெட்டுக்கு வெளியேயும் பேசுவதற்கு மிகவும் சிறந்த மனிதர்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -