தற்போது யுஏஇ-ல் நடைபெற்று வரும் அண்டர் 19 ஆசியக் கோப்பை தொடரில் ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 221 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்கிறது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் யுஏஇ அணிகள் ஒரு பிரிவில் இடம் பெற்று இருக்கின்றன.இன்னொரு பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது.
சதம் அடித்த இந்திய கேப்டன்
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜப்பான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆயுஷ் மத்ரே அதிரடியாக 29 பந்தில் 54 ரன்கள், வைபவ் சூரியவன்சி 23 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் முகமத் அமீன் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 118 பந்துகளில் 7 பவுண்டரிகள் உடன் 122 ரன்கள் எடுத்தார். மேலும் ஆன்ட்ரே சித்தார்த் 48 பந்தில் 35 ரன்கள், கேபி.கார்த்திகேயா 49 பந்தில் 57 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் எடுத்தது. ஜப்பான் தரப்பில் கீஃபர் லேக், ஹுகோ ஹெல்லி தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
ஓவர் பொறுமை காட்டிய ஜப்பான்
இதைத் தொடர்ந்து விளையாடிய ஜப்பான் அணி 50 ஓவர்கள் முடிவில் மிகப் பொறுமையாக விளையாடிய எட்டு விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஹுகோ ஹெல்லி 111 பந்துகளில் 50 ரன்கள், சார்லஸ் ஹின்ஸ் 68 பந்தில் 35 ரன்கள் எடுத்தார்கள்.
இதையும் படிங்க : ஹேசில்வுட் காயத்தால விலகல.. அவர தூக்கிட்டாங்க.. பின்னணி காரணம் இதுதான் – கவாஸ்கர் பேட்டி
இறுதியாக இந்திய அணி 221 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சில் சேட்டன் சர்மா, ஹர்திக் ராஜ் கேபி கார்த்திகேயா மூவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். இந்திய அணி தன்னுடைய கடைசி போட்டியில் யுஏஇ அணியை வென்றால் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.