இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் புஜாரா தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் இருக்கும் இளம் இந்திய வீரர் சுப்மன் கில்லுக்கு அங்கு அவர் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பது குறித்து அறிவுரை கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு முறையும் டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்ட புஜாராவுக்கு இந்த முறை வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் அவர் தன்னுடைய இடத்தில் விளையாடும் இளம் வீரர் கில்லுக்கு தன்னுடைய ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயண அனுபவத்திலிருந்து அறிவுரை கூறியிருக்கிறார்.
இப்போதைய வீரர்களிடம் என்னால் இதை சொல்ல முடியாது
இதுகுறித்து பேசிய புஜாரா கூறும் பொழுது “டெஸ்ட் கிரிக்கெட் இப்பொழுது முன்னேறி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடக்கூடிய பல பேட்ஸ்மேன்கள் தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வந்து கொண்டிருக்கிறார்கள்.
“ஒவ்வொரு வீரரும் தங்கள் பலத்திற்கு ஏற்ப விளையாடுகிறார்கள். நான் விளையாடி வந்த காலகட்டத்தில் இருந்து என்னுடைய பலம் மற்றும் பலவீனத்திற்கு ஏற்றபடி நான் விளையாடினேன். தற்போதைய வீரர்கள் அவர்களுடைய காலத்திற்கு அவர்களுடைய பலம் மற்றும் பலவீனத்தில் விளையாடுகிறார்கள். அவர்களிடம் சென்று நான் என்னைப் போல் விளையாட வேண்டும் என்று சொல்ல முடியாது”
ஆஸ்திரேலியாவில் சுப்மன் கில் இதை பின்பற்ற வேண்டும்
“கில் ஏற்கனவே ஆஸ்திரேலியா சூழ்நிலையில் விளையாடிய அனுபவத்தை பெற்றவராக இருக்கிறார். அவர் தன்னுடைய பேட்டிங் பாணியை ஆதரித்து நம்பி விளையாட வேண்டும். ஆனால் எந்த ஷாட்டை விளையாட வேண்டும் தவிர்க்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் விளையாடும் பல ஷாட் ஆஸ்திரேலியாவில் விளையாட முடியாது”
இதையும் படிங்க : எனக்கு பும்ரா இப்படிப்பட்ட ஆள்தான்.. இவங்க 2 பேர் இருக்கப்ப அவருக்கு கவலை இல்ல – மோர்னே மோர்கல் பேட்டி
“கில் முதலில் தன்னுடைய பலம் எதுவென்று மிகச் சரியாக மதிப்பிட வேண்டும். பின்பு அவர்தான் தவிர்க்க வேண்டிய ஷாட் எதுவென அவர் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர் ஒரு திறமையான இளம் வீரர். அவரிடம் நிறைய கிரிக்கெட் ஷாட் இருக்கிறது. இதிலிருந்து ஆஸ்திரேலியா சூழ்நிலைக்கு எது சரியாக இருக்கும் இருக்காது? என்று அவர் முடிவு செய்துவிட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






