எனக்கு பும்ரா இப்படிப்பட்ட ஆள்தான்.. இவங்க 2 பேர் இருக்கப்ப அவருக்கு கவலை இல்ல – மோர்னே மோர்கல் பேட்டி

0
29
Morkel

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கும் பும்ரா பற்றி இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

இந்திய அணியின் வழக்கமான டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா தன்னுடைய மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இதன் காரணமாக துணை கேப்டன் பும்ரா முதல் டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கிறார். இது அவருக்கு கேப்டனாக இரண்டாவது சர்வதேச டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பும்ராவின் மாறாத விருப்பம் மற்றும் கருத்து

இந்திய அணியை மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கேப்டனாக வழி நடத்துவதற்கு பும்ரா வெளிப்படையாகவே தனது விருப்பத்தை பல நாட்களாக தெரிவித்து வருகிறார். குறிப்பாக அவர் குறைந்தபட்சம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை விரும்புகிறார். வேகப் பந்துவீச்சாளர்கள் கேப்டன் பொறுப்பில் மிகச் சிறப்பாக இருக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை வேண்டி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தான் ஒரு நாளும் போய் நிற்க மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மிக முக்கியமான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் கேப்டனாக பும்ரா எப்படி செயல்படுவார் என்கின்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கிறது.

- Advertisement -

பும்ராவுக்கு உதவ இவர்கள் இருக்கிறார்கள்

இதுகுறித்து பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கூறும்பொழுது “பும்ரா எப்பொழுதும் தன் கைகளை உயர்த்தி கேப்டன் பொறுப்பை விரும்பக்கூடிய ஒரு பையன். அவர் கடந்த காலத்தில் மிகவும் வெற்றிகரமாக இருந்திருக்கிறார். அவருக்கு யாரிடம் என்னை எதிர்பார்க்க வேண்டும் என்று சரியாக தெரியும். அவர் ஓய்வறையில் வீரர்களிடம் மிகச் சிறப்பாக பேசுகிறார். மேலும் பந்தை கையில் எடுத்து அணியை வழிநடத்தக் கூடியவர். இளையவர்கள் அவரை பின்தொடர்வார்கள்”

இதையும் படிங்க : கம்பீர் பேசியதுதான் ரொம்ப சரி.. ரிக்கி பாண்டிங்க்கு எதிர்ப்பாக கிளம்பிய மைக்கேல் கிளார்க் – ஆதரவு பேட்டி

“பும்ராவை பொருத்தவரை அவருக்கு இது மிகவும் சிறந்த சவால். அதே சமயத்தில் களத்தில் உதவுவதற்கு விராட் கோலி கே.எல். ராகுல் என அருமையான அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர் பந்து வீசும் போது அணிக்கு நல்ல அமைதி கிடைக்கும். பும்ரா ஒரு இயல்பான தலைவர்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -