இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விக்கெட்டை மிட்சல் ஸ்டார்க் எப்படி கைப்பற்றினார் என்பது குறித்து ஹர்பஜன்சிங் மற்றும் புஜாரா இருவரும் விளக்கி பேசி இருக்கிறார்கள்.
விராட் கோலி இன்றைய போட்டியில் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் வீசிய வெளியில் சென்ற பந்து ஒன்றை விளையாடலாமா அல்லது வேண்டாமா என்று இரட்டை மனதுடன் விளையாடி ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து பரிதாபமாக ஆட்டமிழந்து வெறுப்பேற்றினார். இன்று விராட் கோலி விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையான விக்கெட்டாக அமைந்தது.
விராட் கோலியின் டபுள் மைன்ட்
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஹர்பஜன் சிங் கூறும் பொழுது ” விராட் கோலி பந்து டெம்புக்கு மேலே செல்லும் என்று நினைத்திருக்கலாம். இதனால் அவர் பந்து விட்டு விட நினைத்தார். ஆனால் திடீரென அவர் பந்தை விளையாட சென்றார். சந்தேகத்துக்கு இடமின்றி இந்த இடத்தில் விராட் கோலி தவறு செய்தார். இதன் காரணமாகவே அவர் ஆட்டம் இழந்தார். அவர் முழு மனதுடன் விளையாடு இருந்தால் அந்தப் பந்தை எளிதாக விளையாடியிருப்பார்”
“விடுவதா அல்லது விளையாடுவதா என்று முடிவு எடுக்காத காரணத்தினால் பந்துக்கு தகுந்த மாதிரி அட்ஜஸ்ட் செய்ய அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. இதனால் இரட்டை மனதுடன் அவர் இருந்தார். விக்கெட்டையும் கூடுதலாக இழந்தார். இது ஆட்டத்தை மாற்றக்கூடிய தருணமாக இன்று அமைந்துவிட்டது” என்று கூறியிருக்கிறார்.
ஸ்டார்க் செய்த செட்டப்
இது குறித்து பேசி இருக்கும் புஜாரா கூறும்பொழுது “ஸ்டார்க் ஆரம்பத்தில் ப்ந்தை உள்ளே கொண்டு வந்தார். அதன் வீசப்பட்ட பந்து நேராக சென்றது. விராட் அவுட் ஆனபந்து உள்ளே வரலாம் என விராட் நினைத்தார். ஆனால் அந்த பந்தும் வெளியே வீசப்பட்டது. இந்த முறையில் ஸ்டார்க் சிறப்பான செட்டப் செய்தார்”
இதையும் படிங்க : 116 ரன்.. பாகிஸ்தான் U19 அணிக்கு நடந்த பரிதாபம்.. பைனலில் இந்தியாவுடன் பங்களாதேஷ் தகுதி
“ஸ்டார்க் முதலில் பந்தை குட் லென்த்தில் வைத்தார். இதற்கடுத்து பேக் ஆஃப் தி லென்த்தில் வைத்தார். இது விராட் கோலியை கொஞ்சம் சிரமப்பட வைத்தது. இப்படி வீசப்பட்ட காரணத்தினால் அவர் பந்தை விடுவதா அல்லது விளையாடுவதா என்கின்ற குழப்பத்திற்கு தள்ளப்பட்டு விட்டார். இதன் காரணமாகவே அவர் ஆட்டம் இழந்தார்” என்று கூறியிருக்கிறார்.






