சேவாக் சேவாக்னு கத்தி பாகிஸ்தான் ரசிகர்கள் என்னை உற்சாகப்படுத்தினார்கள்.. அதற்கான காரணம் இதுதான் – ஆரியன் வீர் பேட்டி

0
0

நடந்து முடிந்த அண்டர் 19 ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தன்னை தொடர்ந்து விளையாட பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாகப்படுத்தினார்கள் என இந்திய முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் மகன் ஆரிய வீர் சேவாக் கூறியிருக்கிறார்.

இந்த முக்கியமான போட்டியில் அவருடைய கையில் பந்து தாக்கியது. இதன் காரணமாக அவரால் தொடர்ந்து விளையாடுவதில் சிரமம் ஏற்பட்டது. இருந்த போதிலும் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.

- Advertisement -

மேலும் இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக 365 ரன்கள் எடுத்து அதிக ரன் எடுத்தவராக வந்தார். மேலும் இந்தத் தொடரின் தொடர் நாயகன் விருதும் அவருக்கு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மைதானத்திலிருந்து தன்னுடைய தந்தைக்கு வீடியோ கால் செய்து களத்தில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்களையும், இந்த வெற்றி தனக்கும் அணியினருக்கும் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதில் அவர் பேசும் போது “எனக்கு முழங்கையில் அடிபட்டு தொடர்ந்து பேட்டிங் செய்வதில் சிரமம் உண்டானது. இந்த நிலையில் நான் தொடர்ந்து விளையாட வேண்டும் என மைதானத்தில் இருந்த 2000 பாகிஸ்தான் ரசிகர்கள் அனைவரும் “சேவாக் சேவாக் சேவாக்” எனக் கத்தி உற்சாகப்படுத்தினார்கள். இது எனக்கு மிகவும் புதுமையான அனுபவமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -