116 ரன்.. பாகிஸ்தான் U19 அணிக்கு நடந்த பரிதாபம்.. பைனலில் இந்தியாவுடன் பங்களாதேஷ் தகுதி

0
1689
Bangladesh

தற்போது யுஏஇல் நடைபெற்று வரும் அண்டர்-19 ஆசியக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பங்களாதேஷ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்திய அணியின் பிரிவில் இருந்து பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று இருந்தது. இன்னொரு பக்கத்தில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று இருந்தன. இதில் இந்தியா இலங்கை அணிகள் மோதிய அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு பெற்றது.

- Advertisement -

பாகிஸ்தானை சுருட்டிய பங்களாதேஷ்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தாங்கள் எடுத்த முடிவு மிகச் சரியான சிறப்பான பந்துவீச்சின் மூலம் பங்களாதேஷ் அணி நிரூபித்து காட்டியது. இந்திய அணிக்கு எதிராக அதிரடி காட்டிய பாகிஸ்தான் துவக்க ஆட்டக்காரர்கள் உஸ்மான் கான் மற்றும் ஷாஸய்ப் கான் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்கள்.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிசாவுல்லாஹ் 65 பந்தில் 28 ரன்கள், பர்கான் யூசுப் 32 பந்தில் 35 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தான் அணி 37 ஓவர்களில் 116 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் இக்பால் ஹுசைன் ஏமான் ஏழு ஓவர்கள் பந்துவீசி 24 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

பங்களாதேஷ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

இதைத்தொடர்ந்து சிறிய இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்கார ஜவாத் அப்ரார் 25 பந்தில் 17 ரன்கள், கலாம் சித்திக் அலீம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்கள்.

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் கோல்டன் டக்.. உண்மையில் அந்த பந்துக்கு முன்ன நான் நினைச்சது இதுதான் – மிட்சல் ஸ்டார்க் பேட்டி

இதற்கடுத்து பேட்டிங் செய்ய வந்த ஹக்கீம் தமின் 42 பந்தில் 61 ரன்கள், முகமது சிகாப் 36 பந்தில் 26 ரன்கள் எடுத்தார்கள். பங்களாதேஷ் அணி 22.1 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இந்திய அணியுடன் இறுதி போட்டியில் பங்களாதேஷ் அணி மோத இருக்கிறது. லீக் சுற்றில் அபாரமாக விளையாடிய பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணி இறுதியில் பலம் குறைந்த பங்களாதேஷ் பரிதாபமாக அணியிடம் வீழ்ந்தது.

- Advertisement -