நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வரும் பஞ்சாப் வீரர் மேக்ஸ்வெல் குறித்து இந்திய வீரர் புஜாரா கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் மேக்ஸ்வெல் மொத்தம் ஆறு போட்டிகளில் எடுத்திருக்கும் ரன்கள் வெறும் 41தான். பந்துவீச்சில் மட்டும் அவர் ஏதாவது குறிப்பிடத்தக்க தாக்கத்தை அணிக்கு கொடுத்து வருகிறார். இதன் காரணமாக அவர் மீதான விமர்சனங்கள் வெளியில் அதிகரித்திருக்கிறது.
மதிப்பு குறைந்த மேக்ஸ்வெல்
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி ஆரம்பத்தில் படுதோல்விகளை சந்தித்ததற்கு மேக்ஸ்வெல் மிக முக்கிய காரணமாக இருந்தார். பிறகு அவரை நீக்கிய பிறகு அந்த அணி தொடர் வெற்றிகளை பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அவர் ஆட்டம் இழந்த விதம் மிகவும் கவலை அளிப்பதாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அமைந்திருந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு மேக்ஸ்வெல் ஆட்டம் இழக்கும் முறை மிகவும் கவலை அளிப்பதாக அமைந்திருக்கிறது. அவர் சுழல் பந்து வீச்சை விளையாடும் விதம் மிகவும் சாதாரணமாக இருக்கிறது. மொத்தம் ஆறு போட்டிகளில் 41 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அதே சமயத்தில் அவர் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடும் பொழுது சதம் கூட டி20 கிரிக்கெட்டில் அடிக்கிறார். இதுகுறித்து தற்பொழுது புஜாரா விமர்சனம் செய்திருக்கிறார்.
அவர் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்
இது பற்றி புஜாரா பேசும் பொழுது “மேக்ஸ்வெல் விளையாட விதத்தை பார்க்கும் பொழுது அவர் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அவர் கடந்த எட்டு அல்லது பத்து ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் இதே முறையில் தான் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த இடத்தில்தான் நான் அவர் மீது விமர்சனம் வைக்கிறேன். எந்த ஒரு வீரராக இருந்தாலும் விழித்துக் கொள்ள வேண்டிய ஒரு காலம் இருக்கிறது”
இதையும் படிங்க : தங்கக் கை நிதிஷ் குமாரை பற்றி… கம்மின்ஸ் நீங்க இத மறந்துட்டீங்களா?.. அத பண்ணுங்க – டேல் ஸ்டெய்ன் வலியுறுத்தல்
உங்களுக்கு ஒரு உரிமையாளர் அணியில் அங்கமாக இருந்து விளையாடுவதற்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் சில சமயங்களில் ஒரு என்ன நடக்கிறது என்பது குறித்து கவலை இல்லாமல் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் எப்பொழுதும் அப்படியே இருக்க முடியாது. எல்லாவற்றுக்கும் ஒரு கோடு இருக்கிறது. அவர் மேக்ஸ்வெல் என்கின்ற காரணத்தினால் மட்டுமே அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






