கபில் தேவின் 30 வருட கடப்பாரை சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா ; வெஸ்ட் இண்டீஸ் அணியை பொட்டலம் கட்டிய இந்தியா!

0
2669
Jadeja

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என கைப்பற்றி தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இந்த ஒருநாள் தொடரில் இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான நாட்டில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இஷான் கிஷானுக்கு வாய்ப்பு தரப்பட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் உம்ரான் மாலிக் விளையாடும் அணியில் வாய்ப்பு பெற்றார். முகேஷ் குமார் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

- Advertisement -

ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சு மிகவும் சிறப்பான முறையில் இருந்தது. ஹர்திக் பாண்டியா முதல் விக்கெட்டை வீழ்த்தினார், இரண்டாவது விக்கட்டை தனது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் விக்கெட்டாக முகேஷ் குமார் வீழ்த்தினார். மூன்றாவது விக்கெட்டை சர்துல் வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து பந்தை கையில் எடுத்த இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் அதிரடியான அமர்க்களமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள். ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் இரட்டை விக்கட்டை கைப்பற்ற, இன்னொரு பக்கம் குல்தீப் யாதவ் தனது பிரமாதமான சைனா மேன் பந்துவீச்சை வெளிப்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு க்ளூ இல்லாமல் செய்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் மட்டுமே தாக்குப்பிடித்து 45 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 43 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் 114 ரன்களுக்கு முழுதாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

- Advertisement -

இந்திய அணியின் தரப்பில் அபாரமாக பந்து வீசிய குல்தீப் யாதவ் மூன்று ஓவர்கள் பந்து வீசி, இரண்டு மெய்டன்கள் செய்து, 6 ரன்கள் விட்டு தந்து, நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இன்னொரு பக்கம் ரவீந்திர ஜடேஜா ஆறு ஓவர்களுக்கு 37 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளராக இருந்த கபில்தேவின் சாதனையை முறியடித்தார். 44 விக்கெட்டுகள் உடன் ரவீந்திர ஜடேஜா முதல் இடத்திலும், 43 விக்கெட்டுகள் உடன் கபில்தேவ் இரண்டாவது இடத்திலும், 41 விக்கெட்டுகள் உடன் அணில் கும்ப்ளே மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட் வேகப்பந்துவீச்சாளர் கோர்ட்னி வால்ஸ் 45 விக்கெட்டுகள் உடன் இருக்கிறார்.