” 90வது ஓவர்ல விராட் கோலி இத செஞ்சத கவனிச்சிங்களா.. வேற்று கிரகவாசி..!” – வாசிம் அக்ரம் பரபரப்பான பேச்சு!

0
208
Virat

இந்திய அணி நேற்று முன்தினம் பங்களாதேஷ் அணிக்கு எதிராக உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தற்போது வரை லீக் சுற்றில் நான்கு ஆட்டங்களில் விளையாடி நான்கு ஆட்டங்களையும் வென்றிருக்கிறது. மேலும் தற்பொழுது ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி இடம் கொஞ்சம் பின் தங்கி இரண்டாவது இடத்தை புள்ளி பட்டியலில் பிடித்திருக்கிறது.

- Advertisement -

பங்களாதேஷ் பணிக்கு எதிராக நடந்து முடிந்த கடைசிப் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ரோகித் சர்மா 48 ரன்கள் எடுக்க சுப்மன் கில் உலகக் கோப்பையில் தனது முதல் அரை சதத்தை அடித்தார்.

இதற்கடுத்து வழக்கம்போல் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த விராட் கோலி மெதுவாக ஆரம்பித்து அவர் ஒரு முனையில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். ஸ்ரேயாஸ் 19 ரன்கள் ஆட்டம் இழக்க கேஎல்.ராகுல் உள்ளே வந்தார்.

இந்திய அணி வேகமாக வெற்றியை நெருங்கிய பொழுது விராட் கோலி 74 ரன்கள் எடுத்திருந்தார். அப்பொழுது சதம் அடிக்க அவருக்கு 26 ரன்கள், அணி வெற்றி பெற 26 ரன்கள் என சம நிலையில் ஸ்கோர் இருந்தது.

- Advertisement -

மேற்கொண்டு விராட் கோலி கேஎல் ராகுலை விளையாட விடாமல் மீதி 26 ரன்களையும் அவரே அடித்து தன்னுடைய 48வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சதத்தை நிறைவு செய்தார். இந்த இடத்தில் விராட் கோலி இப்படி விளையாடி இருக்கக் கூடாது என்று சிலபலர் பேசி வருகிறார்கள்.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள வாசிம் அக்ரம் கூறும் பொழுது “அவர் முதல் 50 ஓவர்கள் பீல்டிங் செய்தார். அடுத்து அவர் பேட்டிங்கில் 40 வது ஓவரில் அதாவது ஆட்டத்தின் 90 வது ஓவரில் இரண்டு ரன்களுக்கு ஓடினார். இது அவரது உடல் தகுதியை காட்டுகிறது. மேலும் அவர் வேறொரு கிரகத்தைச் சேர்ந்தவர் போல இருக்கிறார்.

சதம் அடிக்க வாய்ப்பு இருந்தால் அடிக்கட்டும் தற்பொழுது அதில் என்ன பிரச்சனை?! பொதுவாக இவர்கள் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களை ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். விராட் கோலி வந்ததுமே மிகச் சிறப்பான தொடக்கத்தை பெற்றார்!” என்று கூறியிருக்கிறார்!