“விராட் கோலிக்கு உதவி செய்ததற்கு பெருமைப்படுகிறோம்!” – ஆஸி வீரருக்கு மிட்சல் பதிலடி!

0
8088
Virat

பதிமூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மும்பை மைதானத்தில் மோதிக்கொண்டிருந்தன.

இந்த போட்டியில் சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்துள்ள 49 சதங்களை முந்தி ஐம்பதாவது சதத்தை அடித்து விராட் கோலி புதிய உலக சாதனையை படைத்தார்.

- Advertisement -

இந்த போட்டியின் போது வெப்பத்தின் காரணமாக விளையாட முடியாமல் விராட் கோலிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் நியூசிலாந்து வீரர்கள் பலர் விராட் கோலிக்கு களத்தில் உதவி செய்தார்கள்.

நியூசிலாந்து வீரர்களின் இந்த செயலை கண்டித்து ஆஸ்திரேலியா முன்னாள் ஆல்ரவுண்டர் சைமன் ஓடோனல் கடுமையான விமர்சனங்கள் முன் வைத்திருந்தார்.

அதாவது உலகக்கோப்பை அரை இறுதியில் தங்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் வீரருக்கு உதவி செய்வது என்பது கூடாத காரியம் என்றும், இப்படியான நாகரிகங்கள் அவசியமற்றது என்றும் சாடி இருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து நியூசிலாந்து வீரர் டேரில் மிட்சல் இடம் கேட்ட பொழுது “கருப்பு தொப்பி அணிவதற்காகவும், நியூசிலாந்து வீரர்களாகவும் நாங்கள் இதற்கு உண்மையிலேயே பெருமைப்படுகிறோம். எங்களுடைய நாட்டிற்கு ஏற்ற வகையில் நாங்கள் கிரிக்கெட் விளையாட விரும்புகிறோம். மேலும் எங்கள் குழந்தைகள் இதே வழியில் வளர்ந்து வர நாங்கள் விரும்புகிறோம்.

நாங்கள் எப்பொழுதும் கிவிசை போலவே கிரிக்கெட் விளையாடுவோம். மேலும் உலகம் முழுவதும் எங்களை மதிப்பது போல் இருப்போம். மைதானத்தில் மட்டுமல்ல மைதானத்திற்கு வெளியே அன்றாட வாழ்க்கையிலும் நாங்கள் இப்படியே இருப்போம். இதற்காக நாங்கள் உண்மையில் பெருமைப்படுகிறோம்.

இந்த நாட்களில் சர்வதேச கிரிக்கெட்டின் இயல்பு என்பதே இதுதான். மேலும் நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கிறோம். நாங்கள் நாடு திரும்பி மீண்டும் டெஸ்ட் விளையாடும் பொழுது முதல் நாளில் மிக மகிழ்ச்சியாக பெருமையாக கருப்பு தொப்பியை அணிந்து வருவோம்!” என்று கூறியிருக்கிறார்!