நாளை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி பிளேயிங் லெவன்!

0
528
ICT

இந்தியாவிற்கு தென் ஆப்பிரிக்க ஆண்கள் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் வந்திருக்கிறது!

இதில் முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-1 என கைப்பற்றியது. இந்தத் தொடரை முடித்துக்கொண்டு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்காக நாளை புறப்படுகிறது!

இதனால் ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் துணை கேப்டனாக இருக்கிறார். இந்த அணியில் மேலும் ருதுராஜ், இசான் கிசான், சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, சுப்மன் கில், ரஜத் பட்டிதார், ஷாபாஸ் அகமத், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், தீபக் சஹர், ஷர்துல் தாகூர், முகேஷ் குமார் மற்றும் ஆவேஸ் கான் உள்ளனர்.

இந்த ஒருநாள் தொடர் நாளை பீகார் மாநிலம் லக்னோ நகரில் அமைந்துள்ள மைதானத்தில் நடக்க இருக்கிறது. நாளைய போட்டிக்கான இந்திய அணி எவ்வாறான கலவையோடு அமைக்கப்பட்டால் சரிசம பலத்தோடு இருக்கும் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

இந்த இந்திய அணியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஒருநாள் தொடர்களில் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன்கில் ஆகியோர் களம் இறங்குவார்கள். மூன்றாவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார். நான்காவது இடத்தில் இடதுகை பேட்ஸ்மேன் இஷான் கிஷான், ஐந்தாவது இடத்தில் சஞ்சு சாம்சன் களம் இறங்குவார்கள்.

ஆறாவது இடத்தில் இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷாபாஸ் அகமது இடம் பெறுவார். 7வது மற்றும் 8வது இடத்தில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சஹர் ஆகியோர் இடம் பெறுவார்கள். சுழற்பந்து வீச்சாளராக ரவி பிஷ்னோய் இடம் பெறவே வாய்ப்பு அதிகம். 10 மற்றும் 11 ஆவது இடத்தில் முகமது சிராஜ் மற்றும் ஆவேஸ் கான் இடம்பெறுவார்கள். ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பதாக இருந்தால், நான்கு வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் குறைக்கப்பட்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவார். இந்த அணியில் பேட்டிங் வரிசை நம்பர் 8 வரைக்கும் இருக்கும். ஆறு பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள்!

ஷிகர் தவான் – சுப்மன் கில்
ஸ்ரேயாஸ் ஐயர் – இஷான் கிஷான்
சஞ்சு சாம்சன் – சாபாஸ் அகமத்
ஷர்துல் தாகூர் – தீபக் சஹர்
ஆவேஸ் கான் – முகமது சிராஜ் – ரவி பிஷ்னோய்!