இந்த ஆண்டு முதல் டெல்லி மாநில டி20 லீக் டெல்லி பிரிமியர் லீக் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு விளையாடும் இளம் வீரர் பிரியன்ஷ் ஆர்யா ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.
டெல்லியில் இருந்து ஷேவாக்,கம்பீர் மற்றும் விராட் கோலி என பெரிய பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்கு கிடைத்த போதிலும் கூட, டெல்லி மாநில கிரிக்கெட் சங்கம் தங்களுக்கு என டி20 கிரிக்கெட் லீக்கை இதுவரை துவக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த வருடம் முதல் டெல்லி கிரிக்கெட் மாநில சங்கமும் முதல் முறையாக தங்கள் டி20 லீக்கை நடத்துகிறது.
பிரியன்ஷ் ஆர்யா
23 வயதான டெல்லியைச் சேர்ந்த இந்த இளம் இடதுகை பேட்ஸ்மேன் துவக்க ஆட்டக்காரராக அதிரடியாக விளையாடக் கூடியவர். ஆனால் இவர் மீது பெரிய அளவில் ஐபிஎல் அணிகள் யாரும் கவனம் வைக்காமல் இருந்து வந்தார்கள். இந்த நிலையில் டெல்லி பிரிமியர் லீக் மூலமாக இவருடைய திறமை என்னவென்று வெளி உலகத்திற்கு தெரிய வந்திருக்கிறது.
இதுவரை டெல்லி பிரிமியர் லீக் தொடரில் சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 456 ரன்கள் குவித்திருக்கிறார். மேலும் 35 பவுண்டர்கள் அடித்து அதிக பவுண்டரிகள் அடித்த வீரராகவும் தற்போது வரை இவரை இருந்து வருகிறார். இன்று எல்லாவற்றையும் தாண்டி ஒரு அதிரடியான பேட்டிங்கையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்
இன்று வடக்கு டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தெற்கு டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் தெற்கு டெல்லி அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த பிரியன்ஷ் ஆர்யா 50 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 120 ரன்கள் குவித்து மிரட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க: 20 ஓவரில் 287 ரன் அடிச்சது போதாதா.. மீண்டும் ஐபிஎல் விதியில் கை வைக்கும் பிசிசிஐ.. பாவம் பவுலர்கள்
இந்த போட்டியில் 12வது ஓவரை வடக்கு டெல்லி அணியின் மனன் பரத்வாஜ் வீசினார். இந்த ஆறு பந்துகளையும் எதிர்கொண்ட பிரின்ஸ் ஆர்யா வெகு அனாயசமாக ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர்களுக்கு அனுப்பினார். இதோட ஆறாவது பந்தை இடதுகை சுழல் பந்துவீச்சாளர் மனன் பரத்வாஜ் கொஞ்சம் ஏக்கராக வீச முயற்சி செய்ய, அதையும் அட்ஜஸ்ட் செய்து அற்புதமாக லாங் ஆப் திசையில் சிக்சர் அடித்து, ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த சாதனையை படைத்தார். இதற்கான வீடியோ கீழே இருக்கிறது.
6️⃣ 𝐒𝐈𝐗𝐄𝐒 𝐢𝐧 𝐚𝐧 𝐨𝐯𝐞𝐫 🤩
— Delhi Premier League T20 (@DelhiPLT20) August 31, 2024
There’s nothing Priyansh Arya can’t do 🔥#AdaniDPLT20 #AdaniDelhiPremierLeagueT20 #DilliKiDahaad | @JioCinema @Sports18 pic.twitter.com/lr7YloC58D