டெல்லி மாநில அணிக்காக விளையாடும் இளம் இடதுகை ஆட்டக்காரர் பிரியன்ஸ் ஆர்யா சூரியகுமார் யாதவ் தன்னை அழைத்து பாராட்டியது பெரிய உத்வேகமாக அமைந்ததாக கூறியிருக்கிறார்.
இவர் கடந்த ஆண்டு டெல்லி பிரிமியர் லீக் டி20 தொடரில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து அசத்தியிருந்தார். மேலும் அந்தத் தொடரில் இவர் இரண்டு சதங்களும் அடித்திருந்தார். இதன் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியிட்டு வாங்கிய ரிக்கி பாண்டிங்
இந்த வருடம் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி 3.80 கோடி ரூபாய்க்கு சென்று வாங்கியது. இவருக்கு தற்போது அந்த அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால் துவக்க ஆட்டக்காரர்களில் யாராவது சரியாக விளையாடாமல் போனால் நிச்சயம் இவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
டெல்லி பிரிமியர் லீக்கில் இவர் அபாரமாக வெளிப்படுத்திய திறமையின் காரணமாக இவர் மீது ரிக்கி பாண்டிங் நம்பிக்கை வைத்து வாங்கி இருக்கிறார். மேலும் இடது கை துவக்க ஆட்டக்காரர் என்கின்ற காரணத்தினால் இவருக்கு குறிப்பிடும்படியாக சில போட்டிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. விக்கெட் கீப்பர்கள் பிரப்சிம்ரன் சிங் ஜோஸ் இங்கிலீஷ் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக விளையாடலாம். இதில் யாராவது ஒருவர் சரியாக விளையாடவில்லை என்றால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
சூரியகுமார் செய்த மெசேஜ்
இது குறித்து பிரியன்ஸ் ஆர்யா பேசும் பொழுது ” நான் டெல்லி பிரிமியர் லீக்கில் முதல் மூன்று சிக்ஸர்கள் ஒரு ஓவரில் அடித்து இருந்த பொழுது மீதி 3 பந்துகளில் மீண்டும் சிக்ஸர்கள் அடிக்க முடியும் என்று நம்பினேன். ஏனென்றால் அந்த அணியில் என்னுடைய பேட்டிங் பார்ட்னர் ஆயுஸ் பதோனி ஒரு ஓவரில் நான்கு மற்றும் ஐந்து சிக்ஸர்கள் ஏற்கனவே அடித்திருந்தார். நான் ஆறு சிக்ஸர்கள் ஒரு ஓவரில் அடித்ததும் எனக்கு சூரியகுமார் பாய் இடம் இருந்து மெசேஜ் வந்தது. அவர் என் ஆட்டம் மிகவும் பொழுதுபோக்காக சிறப்பாக இருந்தது என்றும், என் மீது நான் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது எனக்கு உத்வேகத்தை கொடுத்தது”
இதையும் படிங்க : 23 போட்டி 15 வெற்றி.. இருந்தும் சாம்பியன்ஸ் டிராபியில் இல்லாத இலங்கை அணி.. காரணம் என்ன.?
“மேலும் ஐபிஎல் தொடரில் நான் விளையாட இருக்கும் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் சந்திக்க ஆவலாக இருக்கிறேன் ஏனென்றால் அவருடைய புல் ஷாட் எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரையும் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். இதுவரை நான் இவரை சந்தித்தது கிடையாது. இவர் நடந்து கொள்ளும் விதம் மற்றும் இவருடைய தன்னம்பிக்கையில் இவர் ஒரு இயல்பான தலைவர். ஐபிஎல் மற்றும் உள்நாட்டில் கேப்டனாக கோப்பைகளை வென்றிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






