கிரிக்கெட் மேல அன்பு மட்டும் பத்தாது.. பிரத்விஷா வீழ்ச்சிக்கு இதான் காரணம் – சிறுவயது கோச் பேட்டி

0
125

ஐபிஎல் 2025 தொடரின் மெகா ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற நிலையில் இதன் கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு அணியும் தேவையான வீரர்களை எடுத்து அணியை வலுவாக மாற்றியமைத்தது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் இளம் வீரராக திகழும் பிரத்விஷா குறித்து அவரது சிறு வயது பயிற்சியாளர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் மெகா ஏலம் 2025

தற்போது நடைபெற்ற முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் பீகாரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்சி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். கிட்டத்தட்ட அவரைப் போன்றே இந்திய கிரிக்கெட்டில் முன்னரே அறிமுகமான பிரித்விஷா டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி தனது ஆட்டத் திறமையை நிரூபித்தார்.

இருப்பினும் அவரது நிலையற்ற ஆட்டம் மற்றும் ஒழுக்கமின்மை காரணமாக இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர் தற்போது ஐபிஎல் தொடரிலும் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இது தவறான வழியில் செல்லும் மற்ற இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அவரது சிறு வயது பயிற்சியாளரான சந்தோஷ் பிங்குட்கர் இது குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

மற்ற விஷயங்கள் உயர்வாக இருக்கலாம் – சந்தோஷ் பிங்குட்கர்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “கிரிக்கெட்டைத் தவிர பிரித்விஷாவுக்கு மற்ற விஷயங்கள் உயர்வாக பட்டதாக கருதலாம். கிரிக்கெட்டுக்கு வெளியே அவர் தனது நெருங்கிய குழுவில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். ஆனால் அவர் கிரிக்கெட்டை நேசிக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.ஆனாலும் கிரிக்கெட் மீதான அவரது அன்பை ஒரு பெரிய முயற்சியாக மாற்ற முடியவில்லை. அதனால்தான் அவர் தற்போது மோசமான நிலைமையில் இருக்கிறார்.

இதையும் படிங்க:மும்பை இந்தியன்ஸ் சிறிய வீரர்களை வளர்க்கும்.. திடீர் பல்டி அடித்த ஹர்திக்.. சிஎஸ்கே பேச்சு என்ன ஆச்சு?.. ரசிகர்கள் கேள்வி

அவர் கூடிய விரைவில் மீண்டு வர வேண்டும் அவருக்கு அனைவரது ஆசிர்வாதமும் உண்டு. அதுமட்டுமல்லாமல் அவருக்கு 25 வயது தான் ஆகிறது. இன்னும் வயது அவரிடம் இருப்பதால் தனது கடின உழைப்பின் மூலமாக மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவார். கடினமாக உழைக்க வேண்டியது அவசியம்” என்று கூறி இருக்கிறார். பிரத்விஷா மீண்டும் தனது திறமையை நிரூபித்து இந்திய அணிக்குள் விரைவில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -