தற்போது ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து பேசி உள்ள கருத்து முன்பு சிஎஸ்கே அணி பற்றி பேசிய கருத்து போல இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட ஹர்திக் பாண்டியா அடுத்த ஆண்டும் கேப்டனாக தொடர்வார் என அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறது. மேலும் அவரை கேப்டனாக கொண்டு வந்ததால் ஏற்பட்ட சலசலப்புகளை புதிய பயிற்சியாளர் ஜெயவர்த்தனேவை வைத்து அணி நிர்வாகம் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.
ஹர்திக் பாண்டியாவின் பழைய பேச்சு
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு முதல் முறையாக கேப்டன் பொறுப்பு ஏற்ற ஹர்திக் பாண்டியா பேசியிருந்தபொழுது தான் கேப்டன் பொறுப்பில் தோனியை போல் செயல்பட விரும்புவதாகவும், அவரிடமிருந்து தான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
மேலும் சிஎஸ்கே அணி சாதாரண வீரர்களை சாம்பியன் வீரர்களாக உருவாக்குகிறது என்றும், அதே சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் வீரர்களை கண்டறிந்து வாய்ப்பு தருகிறது என்றும் பேசியிருந்தார். இது அப்பொழுதே பல மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களால் விமர்சனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹர்திக் பாண்டியாவின் புதிய பேச்சு
தற்போது பேசியிருக்கும் ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது ” இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் சேரும் அனைத்து இளம் வீரர்களுக்கும் என்னுடைய செய்தி என்னவென்றால், உங்களிடம் திறமை இருக்கிறது அதை அணி ஸ்கவுட் சேர்ந்தவர்கள் பார்த்திருக்கிறார்கள். இவர்கள்தான் என்னையும் பும்ராவையும் கண்டுபிடித்தார்கள். இறுதியில் நாங்கள் நாட்டிற்காக விளையாடுகிறோம். நீங்கள் கடினமாக பயிற்சி செய்து விளையாட வேண்டும். மும்பை இந்தியன்ஸ் உங்களை வளர்த்தெடுக்கும் வசதியைக் கொண்டு இருக்கிறது”
“ஏலத்தின் போது யாரை வாங்க வேண்டும் என்பது குறித்து நான் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தேன். போல்ட் வந்திருப்பதால் சிறந்த கலவை கிடைத்து இருக்கிறது மேலும் தீபக் சகரும் இருக்கிறார். இத்துடன் வில் ஜேக்ஸ், ரிக்கல்டன், ராபின் மின்ஸ் போன்ற இளம் வீரர்களும் வந்திருக்கிறார்கள்.நாங்கள் ஏலத்தில் அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க : ரிஷப் பண்ட் நல்லா அங்க நடிச்சாரு.. அதான் என் டீமுக்கு வாங்கினேன் – லக்னோ ஓனர் வித்தியாச கருத்து
மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் வீரர்களை வாங்குகிறது என்று பேசி இருந்த ஹர்திக் பாண்டியா, தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் வீரர்களை உருவாக்குகிறது என்று மாற்றி பேசி இருப்பதாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணியின் ரசிகர்களே விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.