இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய எதிர்காலமாக பார்க்கப்பட்டு தடம் மாறிய பிரித்திவி ஷா தவறான நண்பர்களால் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை பாதிப்படைந்ததை ஏற்றுக் கொள்வதாக கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் இடத்தை நிரப்பக்கூடியவர் என்று பிரித்திவி ஷா ஒரு காலகட்டத்தில் கருதப்பட்டார். ஆனால் அவருடைய தவறான நடத்தையின் காரணமாக தற்பொழுது மாநில அணி மும்பையிலும், ஐபிஎல் மெகா ஏலத்திலும் அவருக்கு இடம் இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
தவறான முடிவுகளை எடுத்து விட்டேன்
இதுகுறித்து பிரித்திவி ஷா பேசும் பொழுது ” நான் வாழ்க்கையில் நிறைய தவறான முடிவுகளை எடுத்து விட்டேன். கிரிக்கெட்டுக்கு நான் குறைந்த நேரத்தையே கொடுக்க ஆரம்பித்தேன். நான் இதற்கு முன்பு மூன்று முதல் நான்கு மணி நேரங்கள் வலைகளில் பயிற்சி செய்வேன். பேட்டிங் செய்யும் பொழுது நான் சோர்வடையவே மாட்டேன். ஆனால் பிறகு கவனச் சிதறல் ஏற்பட்டதை நான் ஒப்புக்கொள்கிறேன்”
“இதன் பிறகு தேவையில்லாத விஷயங்களை எல்லாம் நான் முக்கியமாக கருத ஆரம்பித்து விட்டேன். எனக்கு சில தவறான நண்பர்கள் வந்தார்கள். இப்போது நான் உச்சத்தில் இருந்ததால் சில நட்புகளும் உருவாகியது. அவர்கள் என்னை அங்கும் இங்குமாக அழைத்துச் சென்றார்கள். இதனால் நான் பந்தய பாதையில் இருந்து விலகி விட்டேன். முன்பு எட்டு மணி நேரம் பயிற்சி செய்த நான் இப்பொழுது நான்கு மணி நேரம்தான் செய்கிறேன்”
தாத்தா வரை இழந்துவிட்டேன்
“என் வாழ்க்கையில் வெளியில் சொல்ல முடியாத நிறைய விஷயங்கள் நடந்து விட்டது. எனக்கு குடும்பம் சார்ந்தும் பிரச்சனைகள் இருக்கிறது. எனக்கு என் தாத்தாவை மிகவும் பிடிக்கும். நான் அவரை மிகவும் நேசித்தேன். ஆனால் அவர் இறந்தது என்னை வெகுவாக பாதித்துவிட்டது”
இதையும் படிங்க : ரிஷப் பண்ட் சதங்கள் பற்றிய கேள்வி.. கம்பீரின் சர்ச்சை பதிலால் ரசிகர்கள் கோபம்.. நீங்க பெரிய ஆள் கிடையாது என விமர்சனம்
” நான் என்னுடைய தவறுகளை இப்போது ஏற்றுக்கொள்கிறேன். எந்த சூழ்நிலையிலும் என்னுடைய தந்தை என்னை ஆதரித்து வந்திருக்கிறார். என்னை நான் மட்டுமே இதிலிருந்து மீட்க முடியும் என எப்போதும் அவர் சொல்லி இருக்கிறார். இப்போது நான் 5 வருடத்திற்கு முன்பு இருந்தது போல் வந்து விட்டேன். யார் நம்பாவிட்டாலும் என்னை நான் நம்புகிறேன். என்ன செய்வது என்று எனக்குத் தெரியும். நான் அதை செய்கிறேன். தற்போது தேவையில்லாத எல்லாவற்றையும் விட்டு விட்டேன்” என்று கூறியிருக்கிறார்.






