இந்தியா டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தது குறித்தான பத்திரிக்கையாளரின் கேள்விக்கு தலைமை பயிற்சியாளர் கம்பீர் தந்த பதில் தற்பொழுது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
148 வருட சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆன்டி பிளவருக்கு பிறகு சதம் அடித்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என்ற மகத்தான சாதனையை ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக படைத்தார். மேலும் இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இதைச் செய்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
கொட்டிய சதங்கள்
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் தரப்பில் ஒல்லி போப் மற்றும் பென் டக்கட் என இருவர் சதம் அடித்தார்கள். அதே சமயத்தில் இந்திய தரப்பில் கேஎல்.ராகுல் ஜெய்ஷ்வால் கேப்டன் கில் மற்றும் ரிஷப்மென்ட் இரண்டு சதங்கள் என மொத்தம் ஐந்து சதங்கள் அடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரிஷப் பண்ட் அடித்த இரு சதங்கள் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பயிற்சியாளர் கம்பீர் பாராட்டுகளை தெரிவித்து பதில் அளிக்காமல், வேறு விதமாக பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. மேலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விளையாடும் காலத்தில் கம்பீர் ஒன்றும் பெரிய வீரன் கிடையாது என தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
என்ன நடந்தது?
ரிஷப் பண்ட் சதம் குறித்து பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதில் அளித்த கவுதம் கம்பீர் “இவர் அடித்தது மட்டுமல்லாமல் இந்திய அணியில் இன்னும் மூன்று சதங்கள் இருக்கிறது. அவையும் அணிக்கும் மிகவும் பாசிட்டிவ் ஆனவை. நீங்கள் ஜெய்ஸ்வாலிடமிருந்து, கேப்டனாக அறிமுகமான கில்லிடமிருந்து மற்றும் கேஎல்.ராகுலிடமிருந்து வந்த சதங்கள், இத்தோடு ரிஷப் பண்டின் இரண்டு சதங்கள் எனக் கேட்டிருந்தால், எனக்கு அது பிடித்திருக்கும்”
இதையும் படிங்க : 35 ஓவரில் 220 ரன்கள் விட்டு கொடுத்த பிரசித் கிருஷ்ணா.. முன்னாள் வீரர் இர்பான் பதான் கடும் கண்டனம்.. திறமையை வீணடிப்பதாக கருத்து
“டெஸ்ட் போட்டியில் ஒரு அணியின் பக்கமாக ஐந்து சதங்கள். உண்மையில் இது மிகச் சிறந்த தொடக்கம். கேள்வி ஐந்து சதங்கள் குறித்தும் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார். முதலில் ரிஷப் பற்றி பாராட்டி பேசி இருந்தால் மற்ற வீரர்கள் பற்றிய கேள்விகளும் வந்திருக்கும், ஆனால் கம்பீர் வேண்டுமென்றே இப்படி செய்கிறார் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.






