ஹர்திக் பண்டியாவின் பலே மூவ்… இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம்!

0
788

3வது டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் மூன்று போட்டிகள் இடம் பெற்றிருக்கின்றன. இரண்டு போட்டிகள் முடிவில், முதல் டி20 போட்டியை நியூசிலாந்து அணியும் இரண்டாவது டி20 போட்டியை இந்திய அணியும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமனில் இருக்கின்றன.

- Advertisement -

இந்த இரு அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி பிப்ரவரி ஒன்றாம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. வெற்றி தோல்வியை முடிவு செய்யும் டிசைடர் போட்டி இதுவாகும் என்பதால், இதற்காக இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணிக்கு எதிர்பார்த்த துவக்கம் கிடைக்கவில்லை. சுப்மன் கில் வெறும் 7 ரன்கள் மற்றும் 11 ரன்கள் என சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்தார். மறுபுறம் இசான் கிஷன் 13 போட்டிகளாக அரைசதம் அடிக்கவில்லை. இந்த தொடரில் 5 ரன்கள் மற்றும் 19 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார்.

இவர்கள் இருவரில் இஷான் கிஷன் வெளியில் அமர்த்தி விட்டு, அவருக்கு பதிலாக மூன்றாவது போட்டியில் ப்ரித்வி ஷா உள்ளே எடுத்து வரப்பட உள்ளார் என்கிற தகவல்கள் வந்திருக்கிறது.

- Advertisement -

2021 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ப்ரித்வி ஷா, சையத் முஸ்தகா அலி மற்றும் விஜய் ஹசாரே தொடர் இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு மிகச்சிறந்த பார்மில் இருக்கிறார். அந்த பார்மை பயன்படுத்திக் கொள்ள கேப்டன் ஹார்திக் பாண்டியா திட்டமிட்டு இருக்கிறார்.

முதல் இரண்டு போட்டிகளில் இவரை எடுத்து வராததற்கு முக்கிய காரணம், ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் இரண்டு பேரும் தொடர்ந்து நன்றாக விளையாடி வருகின்றனர். இருவரும் அடுத்தடுத்து இரட்டை சதம் அடித்திருக்கின்றனர். அதன் காரணமாக இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

நியூசிலாந்து டி20 தொடரில் இருவரும் சொதப்பினர். இஷான் கிஷன் 13 போட்டிகளாக திணறுகிறார் என்பதால், அவருக்கு பதிலாக ப்ரித்வி ஷாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது.