பிரித்வி ஷா குல்தீப் யாதவ் அபாரம்; தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி!

0
6324
India A

நியூசிலாந்து கிரிக்கெட் ஏ அணி தல 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியாவிற்கு வந்துள்ளது. இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இந்த ஒருநாள் போட்டி இந்திய ஏ அணிக்கு சஞ்சு சாம்சன் தலைமை ஏற்று இருக்கிறார்.

- Advertisement -

இந்தநிலையில் தொடரின் இரண்டாவது போட்டி இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தார்.

இதன்படி நியூஸிலாந்து ஏ அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 65 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். அதேபோல் டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய ஜோ கார்டர் 50 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். முடிவில் 47 ஓவர்களில் நியூசிலாந்து ஏ அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 10 ஓவர்கள் பந்துவீசி ஐம்பத்தி ஒரு ரன்கள் விட்டு தந்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து இந்திய அணிக்கு துவக்கம் தர பிருத்திவி ஷா மற்றும் ருத்ராஜ் களமிறங்கினார்கள். ருத்ராஜ் 34 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரஜத் பட்டிதார், கேப்டன் சஞ்சு சாம்சன், ரிஷி தவான், ஷர்துல் தாகூர் ஆகியோர் சராசரியான ஒரு பங்களிப்பை தர, இன்னொரு முனையில் களத்தில் நின்ற துவக்க வீரர் பிரித்திவி ஷா அதிரடியில் நொறுக்கித் தள்ளிவிட்டார். அவர் 48 பந்துகளில் 77 ரன்களை குவித்தார். இதில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடக்கம். இதனால் இந்திய அணி வெகு சுலபமாக இலக்கை எட்டி 2-வது வெற்றியைப் பெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது.

- Advertisement -

பிரித்திவி ஷா அணியிலிருந்து சிறிதுகாலம் விலக்கிய பின் தற்போது மிகச் சிறப்பான முறையில் உள்நாட்டு போட்டிகளிலும், இந்திய ஏ அணிக்காகவும் மிகச் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார். கூடிய விரைவில் இவருக்கு இந்திய அணியில் மீண்டும் மறு வாய்ப்பு கிடைப்பதற்கான காலம் நெருங்கி வருகிறது என்று கூறலாம்.