ரோகித் சர்மா ஆப்பு தயார்! புஜராவுக்கு மாற்று வீரர் ரெடி! – பிசிசிஐ எடுக்கவுள்ள முடிவு குறித்து ஹிண்ட் கொடுத்த முன்னாள் வீரர்!

0
4130

“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு பிறகு ரோகித் சர்மா அழுத்தத்தில் இருக்கிறார். புஜாரா தனது இடத்தை பறிகொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.” என்று சமீபத்திய பேட்டியில் பிசிசிஐ நடவடிக்கை குறித்து பேட்டியளித்துள்ளார் வாஷிம் ஜாபர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் தோல்வி இந்தியா அணையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவதற்கு வழிவகுத்திருக்கிறது. கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரை வந்த இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தொல்வியை தழுவியது.

- Advertisement -

அதன் பிறகும் இந்த இந்திய அணியின் மீது நம்பிக்கை வைத்திருந்த பிசிசிஐ தொடர்ந்து அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் மாற்றங்கள் செய்யாமல் விளையாடியது. ஓரிரு இளம் வீரர்கள் மட்டுமே அணிக்குள் எடுக்கப்பட்டனர்.

ஆனால் இம்முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி படுமோசமாக தோல்வியை தழுவியதால் ரோகித் சர்மா, புஜாரா உள்ளிட்ட மற்றும் சில மூத்த வீரர்கள் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுத்து அணியில் மாற்றங்களை கொண்டுவர உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

அந்த வகையில் சமீபகாலமாக பேட்டிங்கில் சொதப்பி வரும் புஜாரா மாற்றப்பட்டு இளம் வீரர் கொண்டுவரப்படலாம். அத்துடன் ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பும் விரைவில் மாற்றப்படலாம். விராட் கோலியும் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். ஓரிரு தொடர்களுக்கு பிறகு அவர் மீதும் பிசிசிஐ கவனம் கொள்ளும் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன.

- Advertisement -

இது குறித்து சமீபத்தில் போட்டியளித்த முன்னாள் இந்திய துவக்க வீரர் வாசிம் ஜாஃபர் பேசுகையில், “ரோகித் சர்மா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் தோல்விக்கு பிறகு அழுத்தத்தில் இருக்கிறார். தன்னுடைய கேப்டன் பொறுப்பை துறக்கலாமா? என்கிற முடிவிற்கும் வந்திருப்பதாக கேள்விப்பட்டேன். நம்பிக்கை இழக்க வேண்டாம். அடுத்து வரவிருக்கும் 50-ஓவர் உலகக் கோப்பையில் கவனம் செலுத்துங்கள.

அதே நேரம் புஜாரா ஓரிரு தொடர்களில் ஓய்வு எடுத்துக்கொண்டு வரவேண்டும். அதுவரை புஜாரா இடத்திற்கு இளம்வீரர் ஜெய்ஸ்வால் பயன்படுத்தப்பட வேண்டும். எதிர்காலத்திற்கு இதுதான் சரியாக இருக்கும். நேரடியாக புஜாரா ஓய்வுபெற்ற பிறகு மற்றொரு வீரரை கொண்டுவருவது சரியாகாது.

வருகிற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் ஜெய்ஸ்வால் பயன்படுத்தப்பட்டால் சரியாக இருக்கும். உள்ளூர் கிரிக்கெட், இந்தியா ஏ கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் என அனைத்திலும் தனது பேட்டிங் மூலம் நிரூபித்து காட்டியுள்ளார்.” என ஜாபர் பேசினார்.