இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பெர்த் மைதானத்தில் நவம்பர் 22 ஆம் தேதி துவங்க இருக்கும் டெஸ்ட் போட்டிக்கானbஇந்திய பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்று பார்க்கலாம்.
இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. முதல் போட்டி அதிவேக ஆடுகளத்தை கொண்ட பெர்த் மைதானத்தில் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் போட்டியில் வெற்றியில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் இரு அணிகளுக்கும் உள்ளது.
ரோகித்-கில் இடங்களை நிரப்பும் வீரர்கள்
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணத்தால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இவருடைய இடத்தில் கேஎல்.ராகுல் விளையாடுவார் என்று தெரிகிறது. பயிற்சியில் கைவிரலில் காயம் அடைந்த கில் இடத்திற்கு தேவ்தத் படிக்கல் வரவழைக்கப்பட்டிருக்கிறார்.
தற்போது மூன்று சுழற் பந்துவீச்சாளர்களில் ஒருவரை விளையாட வைப்பார்களா அல்லது இரு முறை விளையாட வைப்பார்களா என்பதை பொறுத்தும், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா யார் வாய்ப்பு பெறுவார்கள் என்பதை வைத்து மொத்தம் மூன்று விதமான பிளேயிங் லெவனை அமைக்க முடிகிறது. இதில் எந்த பக்கம் கம்பீர் செல்வார் என்பது தான் தற்போது பெரிய கேள்வியாக இருக்கிறது.
மூன்று விதமான அணிகள்
ஒரே ஒரு சுழல் பந்துவீச்சாளராக வாஷிங்டன் சுந்தரை மட்டும் பயன்படுத்துவது. அடுத்து மிதவேக பந்துவீச்சு ஆல் ரவுண்டர் நிதிஷ்குமாரை நீக்கிவிட்டு ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது. இதற்கு அடுத்து ஹர்ஷித் ராணா அல்லது ஆகாஷ் தீப் இவர்கள் இருவருமே சேர்த்து ஏழு பேட்ஸ்மேன்கள் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் என்று களம் இறங்குவது. இப்படியான மூன்று திட்டங்கள் இந்திய அணி வசம் இருக்கிறது.
இப்போதைக்கு இந்திய அணி நிர்வாகம் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இருவரையும் வைத்துக்கொண்டு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளருக்கான இடத்தில் ஹர்சித் ராணா இடம்பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஆஸி பிட்ச்ல வழக்கமான ஃபார்முலா வேணாம்.. 1977 ரெக்கார்ட பார்த்து சுந்தர கொண்டு வாங்க – மஞ்சுரேக்கர் பேட்டி
உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :
ஜெய்ஸ்வால், கேஎல்.ராகுல், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பண்ட், துருவ் ஜுரல், நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா பும்ரா மற்றும் முகமது சிராஜ்.






