இந்திய கிரிக்கெட் அணி இன்னும் சில தினங்களில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள நிலையில் இந்த தொடருக்கு இந்திய அணி மிகத் தீவிரமான முறையில் தயாராகி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் ஆஸ்திரேலியா தொடர் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
ஆஸ்திரேலியா அணி பொதுவாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சுழற் பந்துவீச்சாளர்களை விட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விளையாடும் அணியில் இடம் பெறுவார்கள். இந்திய அணி இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் விளையாடி கைப்பற்றிய இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என விளையாடும் அணி அமைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் ஆஸ்திரேலியா ஆடுகளங்களிலும் திறமையான சுழற் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள் என்று ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுத்து அவரை அணியில் விளையாட வைப்பேன் என்று சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
வாஷிங்டன் சுந்தருக்கு இதனால் வாய்ப்பு கொடுப்பேன்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “சுழற் பந்துவீச்சாளர்களை நம்பியும் வெளிநாட்டு ஆடுகளங்களில் இந்திய அணி சாதனை படைத்துள்ளது. 1977ல் இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் விளையாடிய போது அது மிகவும் நெருக்கமான டெஸ்ட் போட்டியாக அமைந்தது. சமீப காலத்தில் சேவாக் மற்றும் கும்ப்ளே ஆகியோர் கூட சுழற் பந்துவீச்சாளர்களாக விளையாடி இருக்கிறார்கள். அதில் ஆஸ்திரேலியா வீரர் கில்கிறிஸ்ட் உட்பட முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க:இன்னும் 74 ரன் 1 சதம்.. ஆஸி தொடரில் விராட் கோலி படைக்கும் 2 வரலாற்று சாதனை.. சிறப்பு பட்டியலில் பெயர்
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தார். அவர் பந்து வீசுவது மட்டுமல்லாமல் பேட்டிங் செய்யக்கூடிய திறனையும் பெற்றிருக்கிறார். எனவே நான் ஒரு வேகப்பந்து வீச்சாளரைத் தியாகம் செய்து வாஷிங்டன் சுந்தர் போன்ற ஒருவரை எனது அணியில் நிச்சயமாக எடுப்பேன்” என்று மஞ்சுரேக்கர் கூறியிருக்கிறார். வாஷிங்டன் சுந்தர் இதற்கு முன்னர் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ஒரு போட்டியில் விளையாடி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.