இந்திய கிரிக்கெட்

தெஆ 2வது டெஸ்ட்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. 3 முக்கிய மாற்றங்கள்.. கம்பீருக்கு நெருக்கடி

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்க இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு எப்படியான இந்திய பிளேயிங் லெவன் அமையலாம் என்று பார்க்கலாம்.

- Advertisement -

தற்போது காயமடைந்திருக்கும் இந்திய கேப்டன் சுப்மன் கில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறி விட்டார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக நாளைய போட்டிக்கு இந்திய அணியில் குறைந்தபட்சம் இரண்டு மாற்றங்கள் ஆவது இருக்கும்.

நான்கு ஸ்பின்னர்கள் தேவையா?

நாளைய டெஸ்ட் போட்டியை எடுத்துக் கொள்ளும் பொழுது இந்திய அணிக்கு நிச்சயம் நான்கு ஸ்பின்னர்கள் தேவை கிடையாது. அதேசமயத்தில் அக்சர் படேல் இடத்தில் முழுமையான பேட்ஸ்மேனை கொண்டு வந்தால், மூன்று ஸ்பின்னர்கள் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள். மீண்டும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைப்பார்களா? என்று தெரியவில்லை.

எனவே அக்சர் படேல் இடத்தில் நிதீஷ் குமார் ரெட்டியை விளையாட வைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனாலும் அவருடைய பந்து வீச்சு எந்தவிதமான தாக்கத்தையும் இந்திய ஆடுகளத்தில் கொடுக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பேட்டிங் யூனிட்டில் மாற்றம்

இந்த போட்டியில் விளையாட முடியாத சுப்மன் கில் இடத்திற்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடுவதற்கு வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கிறது. மேலும் இன்னொரு மாற்றமாக அக்சர் படேல் இடத்தில் நிதீஷ் குமார் ரெட்டி வரலாம். குல்தீப் யாதவை நீக்கிவிட்டு இன்னொரு வேகப்பந்துவீச்சாளரை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே இந்த இரண்டு மாற்றங்கள் இருக்கலாம்.

இதையும் படிங்க : வெறும் 95 ரன்.. ஜிம்பாப்வேவிடம் விழுந்த இலங்கை அணி.. அசத்திய பவுலர்கள் – முத்தரப்பு டி20 தொடர்

இந்திய பிளேயிங் XI : ஜெய்ஸ்வால், கேஎல்.ராகுல், சாய் சுதர்ஷன், துருவ் ஜுரல், கேப்டன் ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் மற்றும் பும்ரா.

- Advertisement -
Published by
Tags: Ind vs Sa

Recent Posts