தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் நேற்று இலங்கை அணியை ஜிம்பாவே அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தத் தொடரில் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இலங்கை அணிக்கு எதிராக மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ரன் குவித்த ஜிம்பாப்வே
இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னட் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 49 ரன்கள் எடுத்தார். மிடில் வரிசையில் ரியான் பர்ல் 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார்.
இதற்கு நடுவே சிறப்பாக விளையாடிய சிக்கந்தர் ராஸா கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 47 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. வனிந்து ஹசரங்கா 3 விக்கெட் கைப்பற்றினார்.
ஜிம்பாப்வே அசத்தல் பந்துவீச்சு
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஷாங்கா 0, குசால் மெண்டிஸ் 6, குசால் பெரேரா 4, பானுக ராஜபக்சே 11, கமிந்து மெண்டிஸ் 9, வனிந்து ஹசரங்கா 8 ரன்கள், எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதையும் படிங்க : சஞ்சீவ் கோயங்கா இல்லனா நான் இல்ல.. அவரோட ஆதரவுதான் எனக்கு பெரிய நம்பிக்கை.. லக்னோ வீரர் மயாங்க் யாதவ்
ஒரு முனையில் தாக்குப்பிடித்து விளையாடிய கேப்டன் டசன் சனகா மட்டும் 25 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் உடன் 34 ரன்கள் எடுத்தார். இறுதியாக இலங்கை அணி 95 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ஜிம்பாப்வே அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது.






