2வது டெஸ்ட்.. வலிமையான இந்திய உத்தேச பிளேயிங் XI.. 3 பிரில்லியன்ட் மாற்றங்கள்.. தொடர் சமன் ஆகுமா?

0
972
ICT

இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவன் எவ்வாறு அமைவதற்கான வாய்ப்பு உள்ளது? எப்படி அமைந்தால் வலிமையாக இருக்கும்? என்று பார்க்கலாம்.

நடப்பு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்ஹாம், எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருப்பதால் இந்த போட்டியை வென்று தொடரை தற்காலிகமாக சமநிலைக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

- Advertisement -

முதல் மாற்றம்

தற்போது இந்திய அணியின் பவுலிங் யூனிட்டில் விக்கெட் கைப்பற்றக்கூடிய தாக்குதல் பந்துவீச்சாளர் ஒருவர் தேவையாக இருக்கிறார். இடையில் ஒரு பவுலர் விக்கெட் கைப்பற்றும் பொழுதுதான், பும்ராவை தேவைக்கு மட்டுமே பயன்படுத்தி திருப்புமுனைகளை உடனுக்குடன் கொண்டு வர முடியும். இதன் மூலம் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

தற்போது பும்ராவுக்கு ஆதரவாக விக்கெட் எடுத்து கொடுக்க எந்த பவுலரும் இல்லை. மேலும் ஒரு முனையில் சிக்கனமாக பந்து வீசி பும்ராவுக்கு ஆதரவு தரவும் எந்த பவுலரும் இல்லை. எனவே இதற்காக ரவீந்திர ஜடேஜா இடத்திற்கு முழு நேர சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை கொண்டு வர வேண்டிய தேவை இருக்கிறது.

- Advertisement -

இரண்டாவது மாற்றம்

இதற்கு அடுத்து கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் உடன் இணைந்து கடைசி கட்டத்தில் அதிரடியாக ரன்கள் எடுக்கும் ரோலுக்காக ஒரு ஆல்ரவுண்டர் தேவையாக இருக்கிறது. இந்த இடத்திற்கு ரவீந்திர ஜடேஜா மற்றும் சர்துல் தாக்கூரை விட நிதிஷ் குமார் ரெட்டி சரியானவராக இருக்கிறார். மேலும் அவரால் 8 முதல் 10 ஓவர்கள் பந்து வீச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ரவீந்திர ஜடேஜா இடத்தில் குல்தீப் யாதவ், சர்துல் தாக்கூர் இடத்திற்கு நிதீஷ் குமார் ரெட்டி, மேலும் வேகப் பந்துவீச்சு யூனிட்டில் பிரசித் கிருஷ்ணாவை வெளியில் வைப்பதாக இருந்தால், அர்ஸ்தீப் சிங் அல்லது ஆகாஷ் தீப் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம். இப்போதைக்கு பேட்டிங் யூனிட்டில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை.

இதையும் படிங்க: பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மீண்டும் மியூசிக்கல் சேர் சோகம்.. புதிய அறிவிப்பால் ரசிகர்கள் கோபம்

ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், கேப்டன் கில், ரிஷப் பண்ட், கருண் நாயர், நிதிஷ்குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், பும்ரா, சிராஜ் மற்றும் பிரசிக் கிருஷ்ணா.

- Advertisement -