பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மீண்டும் மியூசிக்கல் சேர் சோகம்.. புதிய அறிவிப்பால் ரசிகர்கள் கோபம்

0
157
Pakistan

தற்போது பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு புதிய பயிற்சியாளரை அறிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மியூசிக்கல் சேர் போட்டியை மீண்டும் ஆரம்பித்து இருப்பது அந்த அணி ரசிகர்களை கோபம் அடைய வைத்திருக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் கேப்டன் மற்றும் வீரர்கள் மாற்றப்பட்டு கொண்டே இருக்க, இன்னொரு பக்கம் பயிற்சியாளர்களும் மாற்றப்பட்டு கொண்டே இருக்கிறார்கள்.

- Advertisement -

கேரி கிரிஸ்டின் – கில்லஸ்பி

பாகிஸ்தான் வெள்ளை பந்து மற்றும் சிவப்பு பந்து அணிகளுக்கு
கேரி கிரிஸ்டின், ஜேசன் கில்லஸ்பி இருவரும் புதிய பயிற்சியாளராக சில மாதத்திற்கு முன்பு கொண்டுவரப்பட்டார்கள். ஆனால் இவர்களுக்கு வீரர்கள் சரியான ஒத்துழைப்பை கொடுக்கவில்லை. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இதை பெரிய அளவில் கண்டித்து ஆதரவை வழங்கவில்லை.

பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் மீது விமர்சனங்களை தொடர்ந்து வைத்து அழுத்தத்தை கொடுத்தார்கள். இதன் காரணத்தால் இருவருமே பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்கள். மேலும் தங்கள் வாழ்நாளில் மிக மோசமான நாட்கள் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருந்தது என்று வெளிப்படையாகவே தெரிவித்தார்கள். இதை தொடர்ந்து பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு அகிப் ஜாவேத் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

புதிய பயிற்சியாளர் நியமனம்

தற்பொழுது புதிதாக ஆரம்பிக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளுக்கு பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் வீரர் அஸார் மக்மூத் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு பந்துவீச்சு பயிற்சி, பயிற்சியாளராகவும் துணைப் பயிற்சியாளராகவும் இருந்திருக்கிறார்.

இதையும் படிங்க : அவங்க பேட்ஸ்மேன் விக்கெட்டை எடுக்க.. பீட்டர்சன்னே அந்த ஐடியா குடுத்திருக்கார்.. விடமாட்டேன் – குல்தீப் யாதவ் பேச்சு

மேலும் இங்கிலாந்து கவுண்டி அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்து பட்டங்களை வென்ற காரணத்தால் இந்த பதவிக்கு இவரை தேர்வு செய்திருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது. அதே சமயத்தில் தொடர்ந்து எல்லா பக்கமும் மாற்றங்களை செய்து கொண்டே இருப்பது பாகிஸ்தான் ரசிகர்களை கோபம் அடைய வைத்திருக்கிறது.

- Advertisement -