நாளை பங்களாதேஷ் 2வது டெஸ்ட்.. இந்திய உத்தேச பிளேயிங் XI.. பும்ரா இல்லையா?.. 1 முக்கிய மாற்றம்

0
526
Bumrah

நாளை இந்திய அணி உத்தர பிரதேஷ் கான்பூர் மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அபார வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

பொதுவாக கான்பூர் ஆடுகளம்

கான்பூர் ஆடுகளம் பொதுவாக களிமண்ணால் உருவாக்கப்பட்ட மெதுவான மற்றும் தாழ்வான பவுன்ஸ் கொண்ட ஆடுகளமாகவே இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக இங்கு இரண்டு வேகம் பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் என்று இந்திய அணி எப்பொழுதும் சென்று இருக்கிறது.

இதன் காரணமாக நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் போட்டியில் விளையாடிய மூன்று வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவருக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. சுழல் பந்துவீச்சாளர்கள் பொறுப்பை எடுத்துக் கொள்வார்கள் என்பதால், இது பெரிய பாதிப்பை உண்டாக்காது.

- Advertisement -

பும்ராவுக்கு ஓய்வு – குல்தீப்பா, அக்சரா?

எனவே இந்த போட்டியில் இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து இந்திய அணிக்கு நிறைய டெஸ்ட் போட்டிகள் தொடர்ந்து வருகின்ற காரணத்தினால் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான அவருக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று பரவலாக முன்னாள் வீரர்கள் கூறுகிறார்கள். மேலும் கேஎல்.ராகுல் தொடர்பார் என்றும் சர்பராஸ் கானுக்கு இடம் கிடைக்காது என்றும் தெரிகிறது.

அதே சமயத்தில் அவருடைய இடத்திற்கு விரல் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் படேலை எடுக்காமல், மணிக்கட்டு சைனா மேன் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை வெரைட்டிக்காக தேர்வு செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் அக்சர் படேல் போல பந்து வீசும் ரவீந்திர ஜடேஜா ஏற்கனவே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காசு வேணும்னா இந்திய டீமை கூப்பிடுவீங்களா?.. ஆஸ்திரேலியா டூர் நடுவுல வருது – ஸ்ரீகாந்த் விமர்சனம்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், கேஎல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப் மற்றும் சிராஜ்.

- Advertisement -