நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் நாளை வாழ்வா சாவா போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கு இந்திய அணிகள் பிளேயிங் லெவனில் எப்படியான மாற்றங்கள் நடைபெறலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.
இந்திய அணி தனது அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைய வேண்டும். இல்லையென்றால் தென் ஆப்பிரிக்க அணி அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைய வேண்டும். அப்பொழுது தான் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல முடியும் என்கின்ற சூழ்நிலை இருக்கிறது.
தற்போது இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் முதல் மூன்று இடங்களிலும் இடதுகை வீரர்கள் வருகிறார்கள். இதன் காரணமாக எதிரணியில் பகுதிநேர ஆப் ஸ்பின்னர்கள் பந்துவீச வருகிறார்கள். இந்த முதல் ஓவரிலேயே இந்திய அணி விக்கெட்டை இழப்பது வாடிக்கையாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக மூன்றாவது இடத்தில் விளையாடி வரும் திலக் வர்மாவை நீக்கிவிட்டு, சஞ்சு சாம்சனை தொடக்க இடத்திற்கு கொண்டு வந்து, மேலும் இஷான் கிஷானை மூன்றாவது இடத்தில் விளையாட வைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாற்றம் நடப்பதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளது.
இந்தப் போட்டிக்கு அக்சர் படேல் உறுதியாக இந்திய பிளேயிங் லெவனில் இடம் பெற்று விடுவார். அதே சமயத்தில் வாஷிங்டன் சுந்தரை நீக்கிவிடுவார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தான் ரிங்கு சிங் திடீரென குடும்ப விஷயம் காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் இருந்து வெளியேறி இருப்பதாக செய்திகள் கூறுகிறது.
இதன் காரணமாக ரிங்கு சிங் இடத்தில் வாஷிங்டன் சுந்தரை விளையாட வைப்பதில் மூலமாக இந்திய அணிக்கு பவுலிங் ஆப்ஷன் கூடுதலாக கிடைக்கும். எனவே இந்த மாற்றமும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணி அடுத்த போட்டியில் இந்த மூன்று மாற்றங்களுடன் விளையாடுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கு எதிரா புரமோசன் தரோம்னு எங்க கோச் சொன்னார்.. அதனாலதான் நான் அப்படி செஞ்சேன் – இங்கி கேப்டன் பேட்டி
இந்திய பிளேயிங் XI: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, அர்ஸ்தீப் சிங் மற்றும் பும்ரா.