இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நான்காவது டி20 போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.
இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது. இதில் இந்திய அணி 2 போட்டியையும் தென் ஆப்பிரிக்க அணி ஒரு போட்டியையும் வென்று இருக்கின்றன. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு சிக்கல்
தற்போது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அவருடைய குடும்ப மூத்த உறுப்பினர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் வீடு திரும்பி விட்டார். இன்றைய போட்டியில் அவர் விளையாடுவது கடினம் என செய்திகள் தெரிவிக்கிறது. ஐந்தாவது போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் படேல் உடல் நலக்குறைவு காரணமாக தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் இருந்து வெளியேறி விட்டார். இதன் காரணமாக இந்திய அணி பிளேயிங் லெவனில் இடம்பெறும் முக்கிய இரண்டு வீரர்களை இழந்திருக்கிறது.
குல்தீப் நீக்கப்படுவாரா?
இந்த நிலையில் கடந்த போட்டியில் குல்தீப் யாதவுக்கு பெரிதாக பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இதன் காரணத்தால் அவரை நான்காவது போட்டியில் நீக்கிவிட்டு வாஷிங்டன் சுந்தருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். ஏனென்றால் லக்னோ மைதானம் கொஞ்சம் மெதுவாகவும் அதே சமயத்தில் பெரிதாகவும் இருக்கும். மற்றபடி பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது.
இதையும் படிங்க: கிரீனை வச்சு இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க.. அதுக்குதான் உங்களுக்கு 3 பேர் இருக்காங்க.. கேகேரை எச்சரித்த அணில் கும்ப்ளே
இந்திய பிளேயிங் லெவன்: கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜிதேஷ் சர்மா, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி மற்றும் அர்ஸ்தீப் சிங்.






