கம்பீர் ரொம்ப பயந்து இருக்காரு.. வழி தெரியாம என் மேல தூக்கி எறியறாரு – ரிக்கி பாண்டிங் மீண்டும் விமர்சனம்

0
134
Gambhir

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி உள்நாட்டில் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததால் இந்திய பயிற்சியாளர் கம்பீர் பயந்து போய் உள்ளதாக ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.

ரிக்கி பாண்டிங் விராட் கோலி பேட்டிங் பார்ம் குறித்து கூறிய கருத்துக்கு இந்திய பயிற்சியாளர் கம்பீர் பதிலடி கொடுத்திருந்தார். தான் நல்ல முறையில் கூறிய ஒரு விஷயத்துக்கு கம்பீர் பேசிய விதம் சரியானது இல்லை என ரிக்கி பாண்டிங் நேற்று பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில் மீண்டும் கம்பீர் பேச்சுக்கு ரிக்கி பாண்டிங் தன்னுடைய வழியில் பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலியை வைத்து நகரும் பிரச்சனை

விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு மூன்று டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்திருப்பதாகவும், வேறொரு அணியாக இருந்திருந்தால் அவரை நீக்கி இருப்பார்கள் எனவும் ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார். இதற்கு கம்பீர் ரிக்கி பாண்டிங்க்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? அவர் போய் ஆஸ்திரேலியா கிரிக்கெட் பற்றி யோசிக்கட்டும் என்று திருப்பி பதிலடி கொடுத்திருந்தார்.

இதற்கு நேற்று பதில் அளித்திருந்த ரிக்கி பாண்டிங் தான் விராட் கோலியின் பேட்டிங் பார்ம் எவ்வளவு கவலை அளிப்பதாக இருக்கிறது என்று கூறியதாகவும், இதை விராட் கோலியே ஏற்றுக் கொள்வார் என்றும், மேலும் விராட் கோலி ஆஸ்திரேலியாவின் சிறப்பான முறையில் விளையாடுவார் என்றுதான் தான் கூறியதாகவும், கம்பீர் இதற்கு ரியாக்ட் செய்த விதம் சரியில்லை என்றும் பேசி இருந்தார்.

- Advertisement -

கம்பீர் பயந்து போய் இருக்கிறார்

இந்த நிலையில் மீண்டும் இது குறித்து பேசிய ரிக்கி பாண்டிங் ” நியூசிலாந்து அணிக்கு எதிராக ஏற்பட்ட தோல்வியால் கம்பீர் பயந்து போய் இருக்கிறார். அதனால் அவர் விமர்சனத்தை என் மீது தூக்கி எறிகிறார். நான் விராட் கோலி பேட்டிங் புள்ளி விபரங்கள் பற்றி பார்க்கும் பொழுது கடந்த இரண்டு வருடத்தில் அவர் இரண்டு மூன்று டெஸ்ட் சதம் மட்டும் அடித்தார். மேலும் அவருடைய ஆவரேஜ் 90ல் இருந்து 30க்கு குறைந்தது”

இதையும் படிங்க : ரோகித்தும் கம்பீரும் சச்சினை வச்சு இதை செய்யலாமே.. பொதுவான விஷயத்தை செய்ய எது தடுக்குது? – WV ராமன் கேள்வி

” மேலும் அவர் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடியிருப்பவர். எனவே அவர் ஆஸ்திரேலியாவில் மீண்டும் சிறப்பாக திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நான் கூறினேன். இப்படியான நிலையில் நியூசிலாந்து தொடரில் தோல்வி அடைந்திருந்த பொழுது, கம்பீரிடம் என் கருத்து குறித்து கேட்க, அவர் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு என்னை விமர்சிக்கிறார். நான் தவறாக எதையும் கூறவில்லை” என்று பதிலளித்திருக்கிறார்.

- Advertisement -