இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை விசாகப்பட்டினம் மைதானத்தில் நான்காவது டி20 போட்டி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.
தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்று விட்டது. ஆனால் இதற்கு அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் இரு அணிகளுக்குமே வெற்றி முக்கியமானதாக இருக்கிறது.
திலக் வர்மா இடம் மாறுமா?
இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு முதல் மூன்று போட்டிகளுக்கு மட்டுமே இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணி கடைசி இரண்டு போட்டிகளுக்கும் தொடரும் என்று நேற்று கூறப்பட்டது. இத்துடன் திலக் வர்மா நியூசிலாந்து தொடரை விட்டு மொத்தமாக வெளியேறுகிறார் என்றும் செய்தி வெளியானது.
அதே சமயத்தில் அவர் பிப்ரவரி மூன்றாம் தேதி உடல் தகுதி பெற்று இந்திய அணியுடன் இணைந்து விடுவார் என்று பிசிசிஐ கூறியிருக்கிறது. எனவே இவருடைய இடத்தில் இந்திய டி20 அணியில் இடம் பெற்று இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு தரப்படாது என்பது உறுதியாக இருக்கிறது. தொடர்ந்து அந்த இடத்தில் இஷான் கிஷான் விளையாடுவார்.
வேறு மாற்றங்கள் இருக்குமா?
நடைபெற இருக்கும் நான்காவது டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்திக்கு மேலும் ஓய்வு கொடுக்கப்படலாம். தொடர்ந்து ரவி பிஸ்னாய் இரண்டாவது போட்டியில் விளையாடலாம். அர்ஸ்தீப் சிங் உள்ளே கொண்டுவரப்பட்டு பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம். அக்சர் படேல் காயம் எப்படி இருக்கிறது என்று இதுவரையில் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் மூன்றாவது போட்டியில் விளையாடிய அணியே விளையாடும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவது பெரிய விஷயம் இல்லை.. அதைவிட கஷ்டத்தை பார்த்தவன் நான் – மனம் திறக்கும் கேஎல் ராகுல்
இந்திய பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா, ரவி பிஸ்னாய், குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா.






