பிரச்சனை அவங்க 3 பேர் இல்லை.. அந்த 27 பேர்தான்.. இதுல தப்பு பண்ணா பாகிஸ்தான் எப்படி ஜெயிக்கும் – நாசர் ஹுசைன் கருத்து

0
98

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்று விளையாட தயாராக இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

தொடர் தோல்வியில் பாகிஸ்தான் அணி

சமீபகாலமாகவே தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பாகிஸ்தான் அணி தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டிரா செய்யக்கூடிய தருவாயில் இருந்தும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இடையே கடும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதற்கு முன்னதாக கற்றுக்குட்டி அணியான வங்கதேச அணியிடமும் தோல்வியை சந்தித்து இருந்தது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான பாபர் அசாம், ஷாகின் ஷா அப்ரிடி மற்றும் நசீம் சா ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் வீரர்கள் இல்லை எனவும் கிரிக்கெட் வாரியத்தில் ஏற்படும் குளறுபடிகளே இத்தகைய தோல்விக்கு காரணம் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

தோல்விக்கு காரணம் வீரர்கள் இல்லை

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “பிரச்சனை பாபர் அசாம், அப்ரிடி மற்றும் நஷீம் ஷா ஆகியோர் கிடையாது. பாகிஸ்தான் கிரிக்கெட் இயங்கும் விதத்தில் தான் பிரச்சனை இருக்கிறது. கிரிக்கெட் வாரியத்தில் 26 வெவ்வேறு தேர்வாளர்கள் இருப்பதை கண்டேன், மற்றொன்றில் 27 தேர்வாளர்கள் இருப்பதைக் கண்டேன். இவ்வளவு பேரை வைத்திருக்க இயலாது. இதுவே இங்கிலாந்து அணியை எடுத்துக் கொண்டால் மொத்தமாகவே இரண்டு அல்லது மூன்று பேர் தான் இருப்பார்கள்.

இதையும் படிங்க:ஒரு பவுலரா எனக்கு.. கோச் மோர்கல் இதுல ரொம்ப பெஸ்ட்.. அதனால நான் இப்படித்தான் பந்து வீசுவேன் – ஆகாஷ் தீப் பேட்டி

நீங்கள் தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள், கேப்டன்கள் மற்றும் தொடர்ந்து தலைமைத்துவத்தை மாற்றினால் வெற்றியை நோக்கி செல்வது என்பது சாத்தியம் இல்லை. ஒரு வெற்றிகரமான வணிக அல்லது விளையாட்டு குழு என்பது அவ்வாறு செயல்படாது. குறுகிய கால சிந்தனையோடு செயல்பட்டால் ஆயத்தம் இல்லாமல்தான் செயல்படுவீர்கள். முதல் டெஸ்டில் தோல்வி அடையும் நேரத்திலேயே தீர்வுகளை தேடுவது சரியாக இருக்காது” என்று கூறி இருக்கிறார். எனவே இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலமாக தனது இழந்த பெருமையை பாகிஸ்தான் மீட்டெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -