இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தென் ஆப்பிரிக்காவில் எட்டாம் தேதி துவங்க இருக்கும் முதல் டி20 போட்டிக்கான வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவனை பார்க்கலாம்.
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் செய்து நவம்பர் 8, 10, 13 மற்றும் 15ஆம் தேதிகளில் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முக்கிய வீரர்களைக் கொண்ட இன்னொரு அணி ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
டி20 தொடரை தவறவிடும் வீரர்கள்
கில் மற்றும் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் மட்டும் இல்லாமல், கடந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா போன்றவர்களும் இந்தத் தொடரை தவறவிடுகிறார்கள். மேலும் காயம் காரணமாக ரியான் பராக் இந்த தொடரில் பங்கேற்க முடியவில்லை.
அதே நேரத்தில் மிதவேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரமன்தீப் சிங் இடம்பெற்றுள்ளார். மேலும் வேகப்பந்துவீச்சாளர்களில் யாஸ் தயால் மற்றும் வைசாக் விஜயகுமார் முதல் வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். ஆவேஸ் கான் மீண்டும் அணிக்கு திரும்பி வந்திருக்கிறார்.
வலிமையான பிளேயிங் லெவன்
இந்த டி20 தொடரிலும் அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக வருவார்கள். இதைத்தொடர்ந்து சூரியகுமார் யாதவ், ரிங்கு சிங், திலக் வர்மா மற்றும் ரமன்தீப் சிங் இடம்பெறுவார்கள். அடுத்து ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் இருப்பார்கள். ஒரே ஒரு சுழல் பந்துவீச்சாளராக வருண் சக்கரவர்த்தி இடம் பெறுவார். வேகப்பந்துவீச்சாளர்களாக அர்ஸ்தீப் சிங் மற்றும் ஆவேஸ் கான் இடம் பிடிப்பார்கள்.
இந்த பிளேயிங் லெவனுக்கு வெளியில் திலக் வர்மா, ரவி பிஸ்னாய், வைசாக் விஜயகுமார் மற்றும் யார் தயால் என நான்கு வீரர்கள் இருப்பார்கள். வீரர்களுக்கு காயமோ அல்லது இந்திய அணி தொடரை வென்றாலோ இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்.
இதையும் படிங்க : தோனியை சிஎஸ்கே வச்சிருக்க காரணம் இது மட்டும்தான்.. கடைசி 20 பந்துல அவரால முடியுமா? – ரிக்கி பாண்டிங் பேச்சு
உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :
அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ், ரிங்கு சிங், திலக் வர்மா, ரமன்தீப் சிங், ஹர்திக் பாண்டியா அக்சர் படேல், அர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கான் மற்றும் வருண் சக்கரவர்த்தி