அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனியை தக்க வைத்திருப்பது குறித்து தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டு சிஎஸ்கே அணி நிர்வாகம் ருதுராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரையும் பல 18 கோடிக்கும், சிவம் துபே மற்றும் பதிரணாவை 12 மற்றும் 13 கோடிக்கும், மகேந்திர சிங் தோனியை அன் காப்ட் பிளேயர் லிஸ்டில் நான்கு கோடி ரூபாய்க்கும் தக்க வைத்து இருக்கிறது.
தோனியால் சிஎஸ்கே அணிக்கு என்ன நன்மை?
தற்பொழுது 42 வயதாகும் மகேந்திர சிங் தோனி சிஎஸ்கே அணிக்கு கேப்டனாகவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் விக்கெட் கீப்பராக பழைய முறையில் மிகச் சிறப்பாகவே இருக்கிறார். மேலும் கடைசி சில ஓவர்களில் அவரால் முன்பு போலவே தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது. கடந்த சீசனில் அவர் பந்தை அற்புதமாக கனெக்ட் செய்தார்.
எனவே அவருடைய அனுபவ அறிவு மற்றும் விக்கெட் கீப்பிங் மேலும் கடைசி சில ஓவர்களுக்கான அதிரடி பேட்டிங் என அவர் சிஎஸ்கே அணிக்கு போட்டிகள் தாக்கத்தை உண்டாக்கக்கூடிய அளவில் தற்போது இருக்கிறார். மேலும் அவர் நான்கு கோடி ரூபாய்க்கு கிடைத்திருப்பது, சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய லாபமாக அமைந்திருக்கிறது. இதன் மூலம் அவரால் மீதி செய்யப்பட்ட பணத்தில் வேறு சில வீரர்களை வாங்கலாம்.
தோனி கேப்டன் மட்டும் கிடையாது
இதுகுறித்து பேசி இருக்கும் ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “இரண்டு சீசங்களுக்கு முன்பு தோனி மோசமான சீசன்களை கொண்டிருந்தார். ஆனால் கடந்த ஆண்டு அவர் பழைய தோனியாக திரும்பி வந்து போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தினார். சிஎஸ்கே அணி அவரை முழு சீசனுக்கும் பெற முடியாமல் போகலாம். ஆனால் அவரிடமிருந்து சிறந்ததை பெறுவதற்கு, அவருக்கு தேவையான ஓய்வு கொடுத்து சிஎஸ்கே அணி நிர்வாகம் அவரை பயன்படுத்தும்”
“அவர் எந்த அணியில் இருந்தாலும் கேப்டனாக இல்லாவிட்டாலும் கூட, சிறந்த தலைவராகவும் சிறந்த வழிகாட்டியாகவும் இருப்பார். தற்போது சிஎஸ்கே அணி விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் அவர் மிகவும் முக்கியமானவர். அவர் களத்திற்கு வெளியே இருந்தும் அணிக்கு தேவையானதை கொண்டு வருகிறார்”
இதையும் படிங்க : பிசிசிஐ விராட் ரோகித் சீனியர்களுக்கு புது உத்தரவு.. இனி யாருக்கும் அந்த சலுகை இல்லை – புதிய செய்திகள்
“அவர் இப்பொழுது உண்மையில் கடைசி 20 பந்துகளில் பேட்டிங் செய்து போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அவர் இந்த ரோலில் இப்படி விளையாடுவதின் மூலம் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று காட்டுகிறார்” என்று கூறியிருக்கிறார்.