இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. இந்த போட்டிக்கு இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.
தற்போது இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சு சாம்சனுக்கு பெரிய வாய்ப்பு
இந்த தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் 15 பேர் கொண்ட அணியில் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் இடம் பெறவில்லை. மேலும் இந்த முறையும் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் களம் இறங்குவதற்கு 100% வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் மீண்டும் தன் திறமையை ஓரளவு நிரூபித்தாலும், அவர் தொடர்ந்து இந்திய டி20 அணியில் தொடக்க வீரராக இடம் பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக வந்து இரண்டு சதங்கள் எடுத்த இளம் திலக் வர்மா மூன்றாவது இடத்திலும், நான்காவது இடத்தில் கேப்டன் சூரியகுமார் யாதவ், தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் நிதீஷ் குமார், ஆறாவது இடத்தில் ரிங்கு சிங் மற்றும் ஏழாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா ஆகியோர் களம் இறங்க வாய்ப்பு உண்டு.
பந்துவீச்சு யூனிட்
மேலும் எட்டாவது இடத்தில் அக்சர் படேல், ஒன்பதாவது இடத்தில் வருண் சக்கரவர்த்தி, பத்து மற்றும் பதினொன்றாவது இடத்தில் அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சமி ஆகியோர் இடம் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. பேட்டிங் வரிசையை 8 வரையில் வைக்க முயற்சி செய்யப்படும். இல்லையென்றால் ரிங்கு சிங் இடத்தில் ரவி பிஸ்னாய் அல்லது ஹர்ஷித் ராணா விளையாடலாம்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணி: சூர்யகுமார் யாதவ் (கே), சஞ்சு சாம்சன் (வி.கீ), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல் (து.கே), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி , வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் மற்றும் துருவ் ஜூரல் (வி.கீ).
இதையும் படிங்க : டி20 ஓபனிங் இனி இப்படித்தான்.. மற்றவர்களுக்கு இந்த இடம்தான் – துணை கேப்டன் அக்சர் படேல் பேட்டி
உத்தேச பிளேயிங் XI : சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், நிதீஷ் குமார், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி மற்றும் வருண் சக்கரவர்த்தி,






