டி20 ஓபனிங் இனி இப்படித்தான்.. மற்றவர்களுக்கு இந்த இடம்தான் – துணை கேப்டன் அக்சர் படேல் பேட்டி

0
2143
Axar

நாளை மறுநாள் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே துவங்க இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் குறித்து இந்திய டி20 அணியின் புதிய துணை கேப்டன் அக்சர் படேல் பேட்டியளித்திருக்கிறார்.

கடந்த முறை இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இதில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு இந்த முறை அக்சர் படேல் துணை கேப்டனாக கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

2024 முடிவு செய்துவிட்டோம்

இங்கிலாந்து டி20 தொடர் குறித்து பேசி இருக்கும் அக்சர் படேல் கூறும் பொழுது “நாங்கள் 2024 ஆம் ஆண்டு முதலில் நிலையான தொடக்க ஜோடியை வைத்திருக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டோம். மேலும் மூன்றாம் இடத்தில் இருந்து பேட்டிங் வரிசையில் ஏழாம் இடம் வரை யாருக்கும் எந்த இடமும் நிரந்தரம் கிடையாது என்றும் முடிவு செய்திருக்கிறோம். சூழ்நிலைக்கு தகுந்தபடி இந்த இடங்களில் யார் வேண்டுமானாலும் களம் இறங்குவோம்”

“எங்கள் அணியில் பேட்டிங் வரிசையில் மூன்று முதல் ஏழு வரையில் ஒரு பேட்ஸ்மேனுக்கு நிலையான இடம் என்று எதுவும் கிடையாது. இதற்கு தகுந்தபடி நாங்கள் எங்கள் பேட்ஸ்மேன்களை தயார் செய்து கொள்ளும்படி கூறியிருக்கிறோம். பயிற்சி அமர்வுகளின் போது யார் சிறப்பாக இருக்கிறார்கள் என்பதை பார்த்து நாங்கள் சில விஷயங்களை முடிவு செய்கிறோம்”

- Advertisement -

ஆஸ்திரேலியா தோல்வி பிரச்சனை இல்லை

“தற்போது நான் துணை கேப்டனாக வந்திருக்கின்ற காரணத்தினால், தலைமை குழுவில் திட்டம் குறித்தான விவாதங்களில் பங்கு பெறவேண்டிய அவசியம் இருக்கிறது. நான் தலைமை பயிற்சியாளர் கம்பீர் உடன் சில விவாதங்களில் ஈடுபட்டு இருக்கிறேன். மேலும் இந்திய டி20 அணியை பொறுத்தவரையில் எல்லாவற்றுக்கும் தீர்வு காணப்பட்டு விட்டது. எனவே இதில் அழுத்தம் எதுவும் கிடையாது”

இதையும் படிங்க : ரோகித் விராட் விஷயத்தில் நான் பயப்பட்டேன்.. ஆனா அகர்கருக்கு நன்றி சொல்லிக்கிறேன் – யுவராஜ் சிங் தந்தை பேட்டி

“மேலும் நீங்கள் தலைமை குழுவுக்குள் வரும் பொழுது சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கும். நாங்கள் இது குறித்தும் பேசியிருக்கிறோம். மேலும் நாங்கள் தற்போது நடக்கும் தொடர் பற்றி மட்டுமே கவனம் செலுத்துகிறோம். ஆஸ்திரேலியாவில் என்ன நடந்தது? என்பது முடிந்த விஷயம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -