இந்திய கிரிக்கெட்

இங்கி முதல் ODI.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்குமா? – முழு அலசல்

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டிக்கு இந்திய பிளேயிங் லெவன் எவ்வாறு அமையலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

- Advertisement -

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலில் விளையாடி நான்குக்கு ஒன்று என தோல்வியடைந்து இருக்கிறது. இதைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக இரு அணிகளுக்கும் இது முக்கியமான தொடராகவும் அமைந்திருக்கிறது.

ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் பிப்ரவரி 6ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 9ஆம் தேதி கட்டாக் மைதானத்திலும், 12ஆம் தேதி அகமதாபாத் மைதானத்திலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டி நடைபெற்று தொடர் முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் இந்திய அணியின் முதல் மூன்று இடங்களில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலி என வழக்கமான மூவர் விளையாடுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உண்டு. இந்த பிளேயிங் லெவன்தான் சாம்பியன்ஸ் டிராபியில் களமிறங்கும் என்பதால் இவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். எனவே ஜெய்ஸ்வால் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

- Advertisement -

ஜடேஜாவா அக்சர் படேலா?

இதைத்தொடர்ந்து நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விக்கெட் கீப்பர் கேஎல்.ராகுல் ஆகியோர் இடம் பெறுவார்கள். மேலும் ஆறாவது இடத்தில் வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடுவார். ஏழாவது இடத்தில் ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு இருக்கும் ரவீந்திர ஜடேஜா இடம் பெறவே வாய்ப்புகள் அதிகம். அக்ச்சர் படேலுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்.

இதைத்தொடர்ந்து சுழல் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ், வேகப்பந்துவீச்சாளர்களாக ஹர்ஷித் ராணா, அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சமி ஆகியோர் இடம் பெறுவார்கள். மேலும் அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பண்ட் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அணியில் தொடர்வார்கள்.

இதையும் படிங்க : 13906 ரன்.. சச்சினின் 19 ஆண்டு கால சாதனை.. கண் வைத்துள்ள கோலி.. முறியடிக்க பொன்னான வாய்ப்பு.. முழுவிபரம்

இந்திய பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சமி மற்றும் அர்ஸ்தீப் சிங்.

- Advertisement -
Published by

Recent Posts