தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டிக்கு இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தப் போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியைப் பெற்றால் இந்திய அணி தொடரை வெல்லும். அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றால் தொடரை சமன் செய்யும். எனவே இரண்டு அணிகளுக்குமே இது இறுதிப் போட்டி போல அமைந்திருக்கிறது.
மூன்றாவது t20 போட்டியின் போது தனிப்பட்ட காரணத்தால் பும்ரா வீடு திரும்பி இருந்தார். இந்த நிலையில் அவர் நான்காவது டி20 போட்டிக்கு அணிக்கு வந்துவிட்டார். அதே சமயத்தில் மூன்றாவது டி20 போட்டியில் வாய்ப்பு பெற்ற ஹர்ஷித் ராணா மிகச்சிறப்பாக தரம்சாலா மைதானத்தில் பந்து வீசி இருந்தார்.
இப்போது யாரை வெளியில் அமர வைப்பது என்கின்ற பெரிய தலைவலி கம்பீருக்கு உருவாகி இருக்கிறது. பும்ரா கட்டாயம் விளையாடுவார் என்பது உறுதி. எனவே ஹர்ஷித்ரா ராணாவை வெளியில் வைப்பதற்கு கம்பீர் முயற்சி செய்யலாம். இதனால் அணியில் இன்னும் ஒரு மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.
தற்போது ஹர்ஷித்ராணாவை வெளியில் வைத்தால் எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்ய வீரர் இருக்க மாட்டார். எனவே இதன் காரணமாக குல்தீப் யாதவை வெளியில் வைத்து எட்டாவது இடத்திற்கு வாஷிங்டன் சுந்தரை கொண்டு வர வேண்டிய தேவை இருக்கிறது. எனவே இந்த இரண்டு மாற்றங்களை செய்ய வேண்டும்.
இதையும் படிங்க : சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் யாரிடமும் இல்லாத டெக்னிக் இந்த பையன்கிட்ட இருக்கு.. தயவு செஞ்சு வாய்ப்பு கொடுங்க – ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்திய பிளேயிங் லெவன்: கில், அபிஷேக் ஷர்மா, சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஜிதேஷ் சர்மா, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அர்ஸ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் பும்ரா.