இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்று பார்க்கலாம்.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதன் முதல் நான்கு போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி இரண்டுக்கு ஒன்று என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் ஐந்தாவது மற்றும் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் ஜனவரி 3ஆம் தேதி சிட்னி மைதானத்தில் தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவில் சுழல் பந்து வீச்சுக்கு கொஞ்சம் சாதகம் தரக்கூடிய மைதானமாக எப்பொழுதும் சிட்னி மைதானம் இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களுடன் தொடர்வதா? அல்லது ஒரு சுழல் பந்துவீச்சாளர் உடன் செல்வதா? அந்த ஒருவர் யார்? என பல கேள்விகளில் சிக்கி இருக்கிறது.
மேலும் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத கில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடியே ஆக வேண்டும் என வெளியில் இருந்து பலமான குரல்கள் எழுந்திருக்கின்றன. இன்னொரு பக்கத்தில் முகமது சிராஜ் இடத்தில் பிரசித் கிருஷ்ணா விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் ரோகித் சர்மா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் தன்னை விளையாடாமல் டிராப் செய்வாரா? ஒட்டுமொத்தமாக ஓய்வை அறிவிப்பாரா? என்ற பெரிய கேள்வியும் இருக்கிறது.
இந்திய அணியில் முகமது சிராஜ் விளையாடுவதற்கு தயாராக இருந்தால் பழைய நான்காவது டெஸ்ட் போட்டி அணியே களம் இறங்கலாம். ஏனென்றால் ரோகித் சர்மா மீண்டும் ஆறாவது இடத்திற்கு கில் விளையாடுவதற்காக கீழே இறங்க மாட்டார். அந்த முடிவு மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகும்.
மேலும் வாஷிங்டன் சுந்தர் ரவீந்திர ஜடேஜா இருவரில் ஒருவரை வெளியில் வைத்தால் கில்லை விளையாட வைக்கலாம். கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவருமே அரைசதம் அடித்திருக்கிறார்கள். எனவே யாரை டிராப் செய்வது என்பது பெரிய கேள்வியாக இருக்கும். இருந்தபோதிலும் இடது கை பேட்ஸ்மேன்களை குறி வைத்து வாஷிங்டன் சுந்தர் விளையாட வாய்ப்புகள் அதிகம்.
இதையும் படிங்க : வெறும் 11 போட்டி..தென் ஆப்பிரிக்கா WTC பைனல் வந்த விவகாரம்.. ஜெய் ஷா சரி செய்யணும் – கெவின் பீட்டர்சன் வலியுறுத்தல்
இந்திய பிளேயிங் XI : ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், கேஎல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், சுப்மன் கில், நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், பும்ரா மற்றும் சிராஜ்.