நாளை டி20 உ.கோ பைனல்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. துபே இடத்தில் சாம்சன் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு இருக்கா? – முழு அலசல்

0
778
ICT

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை பார்படாஸ் பிரிட்ஜ்டவுன் கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்திய அணி நிர்வாகம் இந்த போட்டிக்காக தங்களுடைய வழக்கமான பிளேயிங் லெவனில் மாற்றங்களை செய்ய வாய்ப்பு இருக்கிறதா? என்று பார்க்கலாம்.

தற்போது இந்திய பிளேயிங் லெவனில் மாற்றம் செய்வதற்கு இரண்டு இடங்கள் மட்டுமே இருக்கிறது. சிவம் துபே அல்லது ரவீந்திர ஜடேஜா என இவர்களது இடத்தில் பஞ்சு சாம்சன் அல்லது முகமது சிராஜ் இருவரில் ஒருவரை கொண்டு வரலாம். இதற்கான வாய்ப்புகள் எப்படி இருக்கிறது என்று அலசலாம்.

- Advertisement -

இறுதிப்போட்டி நடக்கும் பார்படாஸ் மைதானமும் சுழல் பந்து வீச்சுக்கு சாதகத்தைக் கொண்டு இருக்கும். எனவே இந்த காரணத்தினால் ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட மாட்டார் என்பது உறுதியாகி விடும். எனவே பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் கிடையாது.

மேலும் நேற்று அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ரோகித் சர்மா 14 ஓவர்கள் தாண்டி ஆட்டம் இழந்தார். இதற்கடுத்து இங்கிலாந்து அணியின் ஆர்ச்சர் போன்ற அதிவேக பந்துவீச்சாளர்கள் வருவார்கள் என்பதால், சிவம் துபேவை நிறுத்திவிட்டு ஹர்திக் பாண்டியாவை மேலே அனுப்பினார்கள். அடுத்த விக்கெட்டுக்கும் ரவீந்திர ஜடேஜாவை அனுப்பினார்கள்.

இந்திய அணி நிர்வாகம் சிவம் துபேவை ஸ்பின்னர்களை அட்டாக் செய்வதற்காக வைத்திருக்கிறது. 14, 15 ஓவர்கள் போட்டியில் தாண்டிவிட்டால் அவர்களுக்கு சிவம் துபே தேவைப்படுவது இல்லை. மேலும் தென் ஆப்பிரிக்கா அணியில் சுழல் பந்துவீச்சாளர்கள் கேசவ் மஹராஜ் மற்றும் சம்சி இருவரும் இறுதி போட்டியில் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் உறுதியாகவே உண்டு.

- Advertisement -

எனவே இதன் காரணத்தால் சிவம் துபேவை இறுதிப்போட்டியிலும் கைவிட மாட்டார்கள். மேலும் வெற்றி பெற்று வருகின்ற பிளேயிங் லெவனை பொதுவாக மாற்றவும் மாட்டார்கள். இப்படியான காரணங்களினால் சிவம் துபே விளையாடுவார். சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது. நேற்று அரையிறுதியில் விளையாடிய அதே இந்திய அணியே இறுதிப் போட்டியிலும் விளையாடும்.

இதையும் படிங்க : இந்தியா இங்கிலாந்த அடிச்ச அடியில தெ.ஆ பயந்திருக்கும்.. ஆனா ரோகித் இந்த ஒரு சேஞ்ச் பண்ணனும் – சோயப் அக்தர் அட்வைஸ்

2024 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன்:

ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.