இந்தியா இங்கிலாந்த அடிச்ச அடியில தெ.ஆ பயந்திருக்கும்.. ஆனா ரோகித் இந்த ஒரு சேஞ்ச் பண்ணனும் – சோயப் அக்தர் அட்வைஸ்

0
1576
Rohit

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை பார்படாஸ் மைதானத்தில் இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டியில் மோதிக் கொள்கின்றன. இந்த நிலையில் இந்தியாவை பார்த்து தென் ஆப்பிரிக்கா அணி இந்நேரத்திற்கு பயந்திருக்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறியிருக்கிறார்.

இந்திய அணிக்கு நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து என மூன்று அணிகளுக்கு எதிராகவும் பெரிய வெற்றிகள் வந்திருக்கிறது. இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அமெரிக்க நியூயார்க் மைதானத்தில் மிகக் குறைந்த ஸ்கோரை வைத்து பும்ரா மேஜிக் பந்து வீச்சில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி பெரிய போட்டியாக பார்க்கப்பட்டது. அதில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா யாரும் எதிர்பார்க்காத வகையில் 41 பந்தில் 92 ரன்கள் குறித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்ததோடு ஆஸ்திரேலியா அணியை அரையிறுதியில் இருந்து வெளியே அனுப்பினார்.

இதைத் தொடர்ந்து நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் அசத்த, பந்துவீச்சில் ஸ்பின்னர்கள் அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இங்கிலாந்து அணியைச் சுருட்டி விட்டார்கள்.

இதுகுறித்து பேசி இருக்கும் சோயப் அக்தர் கூறும் பொழுது “இந்தியா உலகக்கோப்பையை வெல்ல தகுதியான அணி அவர்கள் ஏற்கனவே உலகக்கோப்பைகளை பெற்று இருக்க வேண்டும். அவர்கள் இதையும் வெல்ல வேண்டும் என்று நான் பலகாலமாக சொல்லி வருகிறேன். நாளை தென் ஆப்பிரிக்கா டாஸ் என்றால் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்கள் முதல் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுகிறார்கள். ஆனால் தென் ஆப்பிரிக்க அணி பயந்திருக்கும். இந்திய ஸ்பின்னர்களுக்கு எதிராக யார் ரன்கள் அடிப்பது? எனவே இந்திய அணிதான் வெற்றி பெறும்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒரே நாளில் 525 ரன்.. லேடி சேவாக் செபாலி வர்மா இரட்டை சதம்.. இந்திய அணி தெ.ஆ எதிராக அதிரடி

இந்திய அணிக்கு நாளை ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக வரவேண்டும். விராட் கோலி மூன்றாவது இடத்திற்கு திரும்ப வேண்டும். அவர் முதலில் கொஞ்சம் பந்துகளை எடுத்து தன்னை பலப்படுத்திக் கொண்டு பிறகு அதிரடியாக விளையாடக் கூடியவர். அவருக்கு எடுத்ததுமே அதிரடியாக செல்ல முடியவில்லை. இது அவரை தடுமாற வைத்திருக்கிறது. இந்த ஒரே விஷயத்தை செய்து விட்டால் ரோஹித் சர்மாவிற்கு இருக்கும் எல்லா பிரச்சனைகளும் முடிந்து விடும்” என்று கூறி இருக்கிறார்.