3வது ODI.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. தவறான அணியால் சிக்கிய கம்பீர்.. அந்த வீரர் தேவையா?.. தொடரை வெல்வோமா

0
156
Rohit

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் நடைபெற இருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு இந்திய பிளேயிங் லெவன் எவ்வாறு அமையலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

தற்போது இரு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இதுவரையில் நடைபெற்றுள்ள முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமநிலையில் இருக்கிறது. இதழையில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை மறுநாள் இந்தூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் பிரச்சனை

தற்போது சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயமடைந்து வெளியேறி இருக்கிறார். அவருடைய இடத்திற்கு ஆயுஷ் பதோனி கொண்டுவரப்பட்டிருக்கிறார். ஆனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பு மிதவேகப் பந்து வீச்சு ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டிக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் இரண்டு ஓவர்கள் மட்டும் பந்து வீசி 20 ரன்கள் மட்டும் எடுத்தார்.

அதே சமயத்தில் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் தேவை இருக்கிறது. எனவே 15 பேர் கொண்ட அணியில் அக்சர் படேலை சேர்த்து விளையாட வைத்திருக்க வேண்டும். ஆனால் தவறான அணியை தேர்ந்தெடுத்ததால் நியூசிலாந்து அணிக்கு ஒரு போட்டியை கொடுத்து தொடர் தற்போது சிக்கலான நிலைக்கு மாறியிருக்கிறது.

- Advertisement -

மாற்றம் நடக்குமா?

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய பிளேயிங் லெவலில் ஆயுஸ் பதோனி விளையாட வேண்டியது அவசியமாகிறது. ஆனால் அவரை எதிர்காலத்திற்கான வீரராக பார்க்கவும் முடியாது. ரியான் பராக்கை தேர்வு செய்யாத காரணம் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. இருந்தாலும் இந்த மாற்றத்தை செய்தாக வேண்டி உள்ளது.

இதையும் படிங்க: U19 ODI உலகக் கோப்பை.. 17 ஓவரில் பட்டையை கிளப்பிய இந்தியா.. பிரம்மாண்டமான முதல் வெற்றி.. யுஏஇ படுதோல்வி

இந்தியா பிளேயிங் XI: கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஆயுஷ் பதோனி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா.

- Advertisement -