U19 ODI உலகக் கோப்பை.. 17 ஓவரில் பட்டையை கிளப்பிய இந்தியா.. பிரம்மாண்டமான முதல் வெற்றி.. யுஏஇ படுதோல்வி

0
84
Vaibhav

தற்போது ஜிம்பாப்வே நாட்டில் அண்டர் 19 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்கியிருக்கிறது. இதில் யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் இன்னொரு நட்சத்திர வீரர் வைபவ் சூரியவன்சியும் தொடர்கிறார்.

- Advertisement -

சுருண்ட அமெரிக்க அணி

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த அமெரிக்க அணிக்கு விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்து கொண்டே இருந்தது. கிரிக்கெட்டுக்கு மிகவும் புதிய அணி என்பதால் அவர்களுடைய அனுபவம் இன்மை தெளிவாகத் தெரிந்தது. இறுதியாக அந்த அணி 107 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

அமெரிக்க அணிக்கு பேட்டிங்கில் அதிகபட்சமாக நிதிஷ் சுடினி 52 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் ஹெனில் படேல் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது.

- Advertisement -

நட்சத்திர வீரர்கள் ஏமாற்றம்

இந்திய தரப்பில் நட்சத்திர வீரர்கள் ஆயுஷ் மாத்ரே 19 பந்தில் 19 ரன்கள் மற்றும் வைபவ் சூரியவன்சி 2 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதைத்தொடர்ந்து வேதாந்த் திரிவேதி 2, விகான் மல்கோத்ரா 18 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதையும் படிங்க : சச்சின் சேவாக்கை விட இவர்தான் சிறந்தவர்.. பாகிஸ்தான் வீரர் கருத்துக்கு மன்னிப்பு கேட்ட முன்னாள் வீரர்கள் – சுவாரசிய சம்பவம்

மேலும் மழை பெய்ததால் 37 ஓவர்களில் இலக்கு 96 ரன்னாக மாற்றி அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய அணி 17.2 ஓவர்கள் மட்டுமே எடுத்து இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் தரப்பில் அபிக்யான் குண்டு 41 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். தற்போது இந்திய அணி முதல் போட்டியில் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்று இருப்பது, அரையிறுதிக்கு செல்லும் பயணம் எளிதாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -